உனக்கு செஞ்ச பாவம்..கொரனாவுல சினிமாவே குளோஸ்.. வடிவேலுவிடம் சொன்ன பிரபலம்

vadivelu
Vadivelu: இனிமேல் சினிமாவில் வடிவேலுவை பார்க்க முடியாது என்ற ஒரு சூழ் நிலைதான் வடிவேலுவுக்கு ஏற்பட்டது. அரசியலில் சேர்ந்து வாய்க்கு வந்த படி பேசி படங்களில் நடிக்க முடியாத அளவுக்கு அவருக்கு சோதனை மேல் சோதனை தொற்ற தொடங்கியது. அதன் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சினைகள் எல்லாம் ஓய்ந்து மறுபடியும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் வடிவேலு.
இதை பற்றி ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட மூன்று வருடம் சினிமாவில் கேப். அதில் இரண்டு வருடம் கொரானா லாக் டவுன். இது எல்லாம் முடிந்து இந்த பிரச்சனைக்கு காரணமான தயாரிப்பாளரை சந்திக்க அவர் வேறு ஒருவரை கை காட்ட அவரையும் போய் பார்த்து இருந்த எல்லா பிரச்சனைகளையும் முடித்து இப்போ இப்போதான் கடவுள் புண்ணியத்தில் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
அதிலும் கொரானா நேரத்தில் எனக்கு அடிக்கடி போன் செய்தது இயக்குனர் சுராஜ் தான். அவர் பேசும் போது ‘சினிமா உனக்கு செய்த பாவம் தான் ஒட்டுமொத்தமா கொரானாவில் முடங்கி கிடக்கிறது’ என்று கூறினார். ஆனால் பாவம் எல்லாரும். சினிமாத்துறை மட்டுமில்லாமல் எல்லா மனிதர்களும் குறிப்பாக நலிவடைந்த மக்கள் இந்த கொரானா காலத்தில் தனது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர்.
நான் இந்த உலகமே அழிந்து விடும் என்று நினைத்தேன். நல்ல வேளை அது நடக்கவில்லை. கொரானா வந்ததால்தான் என் குடும்பத்துடன் நேரத்தை செலவிட எனக்கு டைம் கிடைத்தது. என்னுடைய காமெடியை குடும்பத்தில் சொல்லி அவர்களை எல்லாம் சிரிக்க வைத்தேன். மேலும் என்னைப் பற்றி தேவையில்லாத விமர்சனங்கள் வந்தன. நிறைய பேர் என்னை பற்றி பேச ஆரம்பித்தனர்.

அதற்கு காரணம் நான் அமைதியாக இருந்ததுதான். அதன் பிறகுதான் இப்படி அமைதியாக இருக்கக் கூடாதுனு தெரிந்தது. நான் பேச ஆரம்பித்ததும் இப்போ எல்லாரும் ஆஃப் ஆகிட்டாங்க. மேலும் விவேக்கின் மறைவு என்னை மிகவும் பாதித்தது. அவர் மறைவிற்கு நான் போகவில்லை என்று சொன்னார்கள். ஆனால் விவேக் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவி குழந்தைகள் எல்லாரையும் பார்த்துவிட்டு ஆறுதல் கூறித்தான் வந்தேன் என வடிவேலு கூறினார்.