Vadivelu: ஏற்கனவே ஒரு பிரச்சார களத்தில் தன்னுடைய சினிமா கேரியரை தொலைத்தவர் வடிவேலு. தற்போது அதே மாதிரி ஒரு சூழ்நிலையில் மீண்டும் சிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அரசியல் களத்தில் நட்சத்திர பேச்சாளர்களுக்கு எப்போதுமே ஒரு மவுஸ் இருக்கும். அவர்களுக்கும் அந்த குறிப்பிட்ட நாளில் ஒரு பெரிய தொகையை சம்பாதித்து விடலாம் என்பதால் நிறைய நடிகர்கள் பிரச்சார களத்திற்கு வந்துவிடுவார்கள். அப்படி திமுகவின் அறிவிக்கப்படாத நட்சத்திர பேச்சாளர் வடிவேலு தான்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் கலக்கிய ஆர்.வி.உதயகுமார்!.. மறக்க முடியாத சின்னக்கவுண்டர்!..
மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தேர்தலில் வடிவேலுவும் பிரச்சார களத்தில் இறங்க இருக்கிறார். ஏற்கனவே ஒரு தேர்தலில் விஜயகாந்தை படுமோசமாக விமர்சித்தார். அது பலரிடமும் எதிர்ப்பை கிளப்பியது. அதற்குப்பின் வடிவேலுவின் கேரியர் அதள பாதாளத்திற்கு சென்றது.
அந்த வகையில் இந்த தேர்தலில் அவர் எல்லா தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அப்படி அவர் விருதுநகர் தொகுதிக்கு சென்று என்ன பேசுவார் என்பதுதான் தற்போதைய கோலிவுட் வட்டாரத்தின் கேள்வியாக மாறியிருக்கிறது. ஏனெனில் விருதுநகர் தொகுதியில் ஒரு பக்கம் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், இன்னொரு பக்கம் ராதிகா சரத்குமாரும் நிற்கின்றனர்.
விஜயகாந்துடன் மட்டுமல்லாமல் ராதிகாவிடமும் ஓவர் வாய் பேசி இருக்கிறார் வடிவேலு. சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் போது ஒரு விமான பயணத்தில் சரத்குமாரின் மகன் வடிவேலுவிடம் வந்து அங்கிள் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்களும் அப்பாவும் மீண்டும் சேர்ந்து நடிக்கணும் என ஆசையாக கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: கோட் பதிலாக தளபதி69ஐ கடைசி படமாக மாற்ற இதான் காரணம்… நெத்தியடியாக சொன்ன பிரபலம்…
ஆனால் அதற்கு வடிவேலு என்னால் அரசியல்வாதிக்கு வாழ்க்கை கொடுக்க முடியாது என மூஞ்சியில் அடிச்ச மாதிரி பேசி இருக்கிறார். இது ராதிகாவை ரொம்பவே பாதித்துவிட்டதாம். நான் எவ்வளவு பெரிய நடிப்பு குடும்பத்தில் இருந்து வந்தவள். என் கணவரை நீங்கள் எப்படி அப்படி பேசலாம் என அங்கேயே தன்னுடைய கோபத்தை காட்டியிருக்கிறார்.
ஆனால் அதற்கெல்லாம் வடிவேலு அசராமல் இருந்து சமாளித்தாராம். இதை ஒரு மேடையில் ராதிகாவே ஓபனாக தெரிவித்து இருக்கிறார். இப்படி இரண்டு பக்கமும் பிரச்னை இருக்கும் விருதுநகர் தொகுதியில் வடிவேலு என்ன செய்ய போகிறார். அது அவரின் சினிமா வாழ்க்கையை மேலும் அசைத்து பார்க்குமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
இதையும் படிங்க: விரட்டி விட்ட விஜய்!.. சூர்யாவை நம்பி சூப்பாக போகும் கார்த்திக் சுப்புராஜ்!.. இதாவது ஆரம்பிக்குமா?..