கே.எஸ்.ரவிக்குமாருக்கே இந்த நிலைமையா?...பீதியை கொடுத்த வடிவேலு!...திட்டி தீர்க்கும் திரையுலகம்...
தமிழ் சினிமாவில் ஒப்பற்ற படைப்பாளராக திகழ்ந்த் வருபவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இவரின் அர்ப்பணிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்துள்ளன. இவர் அளித்த திரைப்படங்கள் ஒரு காவியமாகவே இன்று பார்க்கப்படுகிறது. இன்றைய புதுமுக இயக்குனர்களின் வரவால் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் ரவிக்குமார்.
இந்த நிலையில் இவர் நடிகர் லாரன்ஸ் தம்பியை எல்வினை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக நடிகர் வடிவேலுவை நடிக்க வைக்க எண்ணிய படக்குழு தயாரிப்பு தரப்பில் இருந்து வடிவேலுவை சந்திக்க போயிருக்கிறது.
ஆனால் வடிவேலுவோ இந்த படத்திற்காக 5 கோடி சம்பளத்தை கேட்டிருக்கிறார். போன வேகத்தில் திரும்பிய படக்குழு வடிவேலுவின் இந்த செயலால் அதிருப்தியில் உள்ளனராம். ஏனெனில் நீண்ட ஒரு கேப்பிற்கு பிறகு இன்னும் படங்களே வெளிவராத நிலையில் அதுவும் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படமான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படமும் வெளிவரவில்லை.
அப்படி இருக்கையில் இப்படி ஒரு தொகையை வடிவேலு கேட்பது நியாயமா என கோலிவுட் வட்டாரத்தில் பேசிவருகின்றனர். மேலும் சந்திரமுகி - 2 படத்திலும் நடித்து வருகிறார். அவரின் படங்களை பார்த்து தான் அவர் அதே ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா என்றே தெரியும். இப்படி கோடிக்கணக்கில் கேட்டு தயாரிப்பாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளார் வடிவேலு.