Connect with us

Cinema News

எல்லா சைடும் விழுந்த அடி!.. உடனடியாக வெங்கல் ராவுக்காக வடிவேலு செய்த செயல்.. என்ன தெரியுமா?..

 

வைகை புயல் வடிவேலு உடன் பல படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த வெங்கல் ராவ் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் தனக்கு ஒரு கை மட்டும் ஒரு கால் விளங்கவில்லை என உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

காமெடி நடிகர் வெங்கட் ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் நடிகர் சங்கம் தனக்கு உதவி செய்ய வேண்டும் என அந்த வீடியோவில் வெங்கல் ராவ் கோரிக்கை வைத்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், அதைப் பார்த்த நடிகர் சிம்பு முதல் ஆளாக ஒரு லட்சம் ரூபாய் நீதியை அவருக்கு அளித்தார்.

இதையும் படிங்க: அப்போ நடிச்சாரே கார்த்திக்… அதுக்கு அப்புறம் என்னாச்சு? இப்படி மிஸ் பண்ணிருக்காரே..!

சிம்புவைத் தொடர்ந்து கேபிஒய் பாலா ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு அளித்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 25,000 ருபாயை நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. சினிமா பிரபலங்கள் பலர் நகைச்சுவை நடிகருக்கு உதவி வரும் நிலையில் வடிவேலு இந்த முறையாவது உதவி செய்வாரா என்கிற கேள்விகள் எழுந்தன.

புளூ சட்டை மாறன் உள்ளிட்ட பல நேரடியாகவே வடிவேலு உதவுவாரா என்கிற கேள்வியை எழுப்பினர். ஆனால், வடிவேலு இந்த முறையும் அமைதி காத்து வந்தது போலவே இருந்த நிலையில், மற்ற நடிகர்கள் வெங்கல் ராவுக்கு உதவ ஆரம்பித்தனர்.

இதையும் படிங்க: லோகேஷ் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, பஹத் பாசில்!. இந்த டிவிஸ்ட் எதிர்பார்க்கவே இல்லையே!..

இந்நிலையில் தற்போது காமெடி நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு நிதியுதவி அளித்துள்ளார். மேலும், போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் வடிவேலு என நகைச்சுவை நடிகர் கிங்காங் தற்போது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். ஒருவழியாக வடிவேலுவுக்கும் மனம் இறங்கி ஒரு லட்சம் ரூபாய் உதவி செய்து விட்டாரே என பலர் பாராட்டி வருகின்றனர்.

வடிவேல் மீண்டும் நடிக்கத் தொடங்கிய நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தி்லும் வெங்கல் ராவுக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்திருந்தார். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சக நடிகர்கள் சேமித்து வைப்பதில்லையா? அல்லது அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லையா? என்றும் ரசிகர்கள் கேட்கின்றனர்.

இதையும் படிங்க: ஒரே ராகம்… வெவ்வேறு ஜாலம்… இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான அந்த ரெண்டு பாடல்கள்

google news
Continue Reading

More in Cinema News

To Top