தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் இவர்களுக்கு பிறகு நகைச்சுவையில் மன்னனாக திகழ்ந்தவர் நடிகர் வடிவேலு. கவுண்டமணி, செந்தில் இரண்டு ஜாம்பவான்களுக்கு பிறகு காமெடி நடிகருக்கென்று அதிக ரசிகர்களை பெற்றவர் வடிவேலுதான். ரசிகர்களால் வைகைப்புயல் என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.

Also Read
தன் முகபாவனையால் அனைத்து வகை உணர்ச்சிகளையும் காமெடியால் கட்டிப் போட்டவர் வடிவேலு. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அனைத்து நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். முக்கியமாக நடிகர் பார்த்திபனுடனான துபாய் காமெடிக்கு தற்போது வரை எந்த ஒரு காட்சியும் ஈடுகொடுக்கவில்லை.

இந்த நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் வடிவேலுவுடன் நடித்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்தார். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் நடிகர் பரத், நடிகை கோபிகா, சரண்யா பொன்வண்ணன், நாசர், வடிவேலு நடிப்பில் வெளிவந்த படம் எம்டன் மகன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.

அந்த அளவிற்கு நகைச்சுவை கலந்த கமெர்ஷியல் படமாகும். இந்த படத்தில் சரண்யா ஒரு காட்சியில் கோயில் முன்பாக உருலுவது போன்ற காட்சி இடம் பெறும். ஆனால் சரண்யா இந்த காட்சியில் நான் நடிக்கவே மாட்டேன். மண் எல்லாம் ஒட்டும் சேலை எல்லாம் களையும் அவமானமாக இருக்கும் என்று சொல்லி அடம்பிடித்துள்ளார்.இதை பார்த்த வடிவேலு வேண்டும் என்றால் இந்த காட்சியில் நான் நடிக்கிறேன் அவங்களுக்காக என்று கூறினாராம். ஆனால் இயக்குனர் சரண்யாதான் நடிக்கவேண்டும் என்று கூறிவிட்டாராம்.



