More
Categories: Cinema News latest news

வடிவேலு அப்பவே அப்படிப்பட்ட ஆளு! என்னங்கடா இது? பல திடுக்கிடும் தகவலை பகிர்ந்த ஹீரோயின்

Vadivelu: கோலிவுட்டில் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார் நடிகர் வடிவேலு. சந்திரமுகி2 படத்தில் அதே முருகேஷனை நம்மால் பார்க்க முடிந்தது.அதற்கு முன் மாமன்னன் திரைப்படத்தில்  நல்ல ஒரு குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் வடிவேலு.

இந்த இரண்டு படங்களினால் அடுத்தடுத்த பல படவாய்ப்புகள் வடிவேலுவை நோக்கி வர ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் வடிவேலுவை பற்றி ஏராளமான சர்ச்சைகள் அவருடன் நடித்த சக நடிகர்கள் மூலமாகவே வெளிவந்தன.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஒரு நிமிஷ விளம்பரத்துக்கு இத்தனை கோடியா?.. ஓவர் ஆட்டம்போடும் நயன்தாரா!. வயித்தெரிச்சலில் சக நடிகைகள்!..

அவர்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும் போது வடிவேலுவா இப்படி என்று ஆச்சரியப்படத்தான் வைத்தது. இந்த நிலையில் வடிவேலு ஆரம்பத்தில் எப்படிப்பட்டவர் என்பதை சுந்தரா டிராவல்ஸ் பட நாயகி ராதா கூறினார்.

அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முழுக்க முழுக்க நகைச்சுவையில் குதூகலித்த படமாக இருந்ததனால் வெற்றியும் பெற்றது. இதன்  மூலம் படத்தில் நடித்த ராதாவுக்கு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்திருந்தனர்.

இதையும் படிங்க: என் சம்பளத்தை குறைச்சிக்கோங்க.. நாகேஷுக்கு வாய்ப்பு கொடுங்க… தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு நடிகரா?

ஆனால் சொல்லும்படியான அளவு கதாபாத்திரங்கள் அமையவில்லை. அதனால் திருமணமாகி செட்டிலானார் ராதா. இரண்டு முறை திருமணமாகியும் இரண்டு வாழ்க்கையும் பிடிக்காத ராதா விவாகரத்து பெற்று தனியாகத்தான் வாழ்கிறார்.

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ராதா. இவர் தான் ஒரு பேட்டியில் வடிவேலுவை பற்றி சில தகவல்களை பகிர்ந்தார். அதாவது வடிவேலு மிகவும் சப்போர்ட் செய்வாராம். அன்பாக இருப்பாராம். பேசுவாராம். நட்பாகவும் இருப்பாராம்.

இதையும் படிங்க: கோடியை கொட்டி கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்!.. ரூல்ஸ் போட்டு நடிக்கும் டாப் 5 நடிகர்கள்..

ராதா டையலாக் எப்படி பேசுகிறார் என்பதை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்றவாறு கோ-ஆப்ரேட் பண்ணி பேசுவாராம். இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை. ஆனால் அப்பொழுதெல்லாம் வடிவேலுவுக்கு பொறாமை என்ற ஒன்று இருந்ததே இல்லை என்றும் நாங்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவோம் என்றும் ராதா கூறினார்.

இதுவரைக்கும் வடிவேலுவை பற்றி தாறுமாறான தகவல்களை மட்டுமே கேட்டு வந்த நமக்கு முதன் முறையாக நல்ல விதமாக ராதா சொன்னது நம்பவே முடியாத மாதிரிதான் இருந்தது.

 

 

Published by
Rohini