
Cinema News
கமலுக்கு நிகர் இந்த காமெடி நடிகரா?.. புதுசாத்தான் யோசிக்கிறாங்கேய்யா!..
தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய விடா முயற்சியால் ஒரு சினிமா வித்தகராகவே திகழ்ந்து வருகிறார்.

kamal1
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை எப்படி நடிப்பு அரக்கன் என்று கூறுகிறோமோ அவருக்கு அடுத்த படைப்பாக விளங்குகிறார் கமல்ஹாசன். தன்னுடைய தொழில்நுட்ப அறிவு, சிந்தனையால் என்றுமே தலை நிமிர்ந்து நிற்கிறார்
நம் உலக நாயகன்.
‘ஆரம்பிக்கலாமா’ என்ற லோகேஷின் வசனத்திற்கேற்ப 80, 90களில் விட்டதை விக்ரம் படத்தின் மூலம் பிடித்தார் அல்லவா கமல். அந்த ஒரு படத்தின் மூலம் உலகமெங்கிலும் இருக்கும் தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். மேலும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி, கன்னடம், மற்றும் மலையாளம் என 6 மொழிகள் பேசக் கூடிய நடிகராக வலம் வருகிறார் கமல்,

kamal2
ஒரு நடிகராக மட்டுமே இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குனர் என பன்முகத்திறமைகள் வாய்க்கப் பெற்ற அற்புத கலைஞனாக திகழ்கிறார். மேலும் அந்த 6 மொழிகளிலும் நடித்த ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகவும் திகழ்கிறார். 80களின் ஆட்ட நாயகனாகவே வலம் வந்தார்.
இப்படி பல பெருமைகளுக்குச் சொந்தக்காரராக திகழும் கமல்ஹாசனோடு நகைச்சுவை நடிகரான வடிவேலுவை ஒப்பிட்டு பேசியிருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளரான ஆர்தூர் வில்சன். ஆர்தூர் வில்சன் ஏராளமான ஹிட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார்.அன்பே சிவம், ரன், புலிகேசி, என எண்ணற்ற் படங்களில் பல முன்னனி நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறார்.

kamal vadivelu
வடிவேலுவை பற்றி இவர் பேசும் போது கமல் அளவுக்கு அவருக்கு நிகராகவே வடிவேலுவை நான் கருதுகிறேன் என்றும் ஏனெனில் கமல் மாதிரியே எந்த சீன் எவ்ளோ நேரத்திற்குள் எடுத்தால் ரசிகர்களிடம் நல்ல முறையில் சென்றடையும் என்று முன்பே அறிந்தவர் வடிவேலு என்றும் எடிட்டிங் வேலைகளும் தெரிந்தவர் என்றும் கூறினார் ஆர்தூர் வில்சன்.
இதையும் படிங்க : ‘துணிவு’ படம் வந்தாலும் வந்தது!.. இந்த நடிகருக்கு மவுசு கூடிருச்சுபா!.. இன்னும் ஏறுமுகம் தான்!..