தமிழ் சினிமாவில் கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்களுக்கு பிறகு அதிகமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர்கள் நடிகர்கள் விவேக் மற்றும் வடிவேலு. இருவரும் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்தவர்கள்.இருவரின் காமெடிகளும் மக்களால் அதிகமாக ரசிக்கப்பட்டவை. எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் சளைக்காமல் மாறி மாறி இருவரும் அவர்களுக்கு கிடைத்த படங்களில் நடித்து வந்தனர்.
சில சமயங்களில் வடிவேலுவுக்கு கிடைக்க வேண்டிய சான்ஸ் விவேக்கிற்கு கிடைக்கும், விவேக்கிற்கு கிடைக்க வேண்டிய சான்ஸ் வடிவேலுவுக்கு கிடைக்கும். ஆனாலும் எந்த ஒரு இமேஜும் பார்க்காமல் நடித்துக் கொடுத்தனர்.மேலும் இருவரும் தங்களுக்கென்று சில துணை நடிகர்களை வைத்துக் கொண்டு படங்களில் தோன்றினர்.
வடிவேலு குரூப், விவேக் குரூப் என்றே இவர்களை அழைத்தனர். காலப்போக்கில் அந்த குரூப்பிற்குள் இடைவெளிகளும் வந்தன. இருவரை பொறுத்தவரை விவேக் வடிவேலு குரூப்பில் இருக்கும் நடிகர்களுக்கு வாய்ப்புகள் வாங்கி கொடுத்திருக்கிறார்.
ஆனால் வடிவேலு இது விவேக் குரூப் என்று தெரிந்தால் அந்தப் பக்கமே திரும்ப மாட்டாராம்.மேலும் கொரானா காலத்தில் கூட தன்னுடன் நடித்த நடிகர்களின் நிலைமை என்ன ஆனது என்று கூட வடிவேலு கேட்கவில்லை என்று அவருடன் நடித்த நடிகர்கள் இன்றுவரை புலம்பி வருகின்றனர்.
வடிவேலுவை எதிர்த்து பேசும் இந்த நடிகர்கள் இதுவரை விவேக்கை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேசியதில்லை. அந்த அளவுக்கு நடிப்புடன் உயர்ந்த எண்ணத்தோடும் உயர்ந்த குணத்தோடும் வலம் வந்திருக்கிறார் விவேக்.
இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி கூட சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலு பற்றி ஒரு சம்பவத்தை கூறினார். கொட்டாச்சி அறிமுகமான புதிதில் விவேக்குடன் ஒரு படத்தில் நடித்தாராம். அப்போது வடிவேலு விவேக்கிற்கு போன் செய்து ‘என்ன நீ வரவனுக்கெல்லாம் வாய்ப்புகள கொடுத்துட்டு இருக்க? சும்மா இருக்க மாட்டீயா? நீ என்ன பெரிய இவரா? ’ என விவேக்கிடம் வடிவேலு கேட்டாராம்.
அதை விவேக் கொட்டாச்சியிடம் ‘என்னடா பண்ண வடிவேல? உன்ன பத்தியே பேசிட்டு இருக்கார்’ என்று சொல்லி கூடவே வடிவேலு சொன்னதையும் சொல்லியிருக்கிறார். அதற்கு கொட்டாச்சி விவேக்கிடம் ‘அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?’ என்று கேட்டாராம்.
இதையும் படிங்க :வெற்றிமாறனிடம் சூர்யா போட்ட கண்டிஷன்… சுதா கொங்கராவுக்கு அடித்த லக்?.. என்னவா இருக்கும்?
அதற்கு விவேக் வடிவேலுவிடம் ‘சினிமாவில் யாருக்கு எங்க சோறு கிடைக்குதோ கிடைக்கும், அத நீ நினைச்சாலும் சரி நான் நினைச்சாலும் சரி தடுக்க முடியாது’ என்று கூறியிருக்கிறார். இதை குறிப்பிட்டு சொன்ன கொட்டாச்சி நடிகர் விவேக் போனதுதான் அனைவருக்கும் வருத்தம் என கூறினார்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…