இந்த படம் மட்டும் பண்ணிருந்தா வடிவேலு லெவலே வேற… சீரீயல் நடிகரின் கையில் இருந்து எஸ்கேப் ஆன வைகை புயல்!
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வரும் வடிவேலு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தில் ஒப்பந்தமானார். ஆனால் வடிவேலு படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தரவில்லை என புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து வடிவேலு படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தராததால் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் வடிவேலுவுக்கு திரைப்படங்களில் நடிக்க ரெட் கார்டு விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த விவகாரம் முடிவுக்கு வர, வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டது. அதன் பிறகு “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “சந்திரமுகி 2”, “மாமன்னன்” போன்ற திரைப்படங்களில் வடிவேலு ஒப்பந்தமானார்.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் வெளிவந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. வடிவேலு பழைய ஃபார்மில் இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. ஆதலால் “சந்திரமுகி 2”, “மாமன்னன்” ஆகிய திரைப்படங்களுக்கு ரெஸ்பான்ஸ் எகிறியுள்ளது.
இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான ஜி.மாரிமுத்து, வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததாக தனது அனுபவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “கத்தி முனையில் கறுப்பு சிங்காரம்” என்ற பெயரில் வடிவேலுக்காக ஒரு கதை எழுதியிருந்தாராம் மாரிமுத்து. அப்போது வடிவேலு நடித்திருந்த “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” தோல்வி படமாக அமைந்திருந்ததாம். அந்த சமயத்தில்தான் இந்த கதையை வடிவேலுவிடம் கூறினாராம் மாரிமுத்து.
அதாவது இந்த கதையில் ஒரு வயதான மூதாட்டியும், அவருக்கு பேரனும் இருப்பாராம். அந்த மூதாட்டி, பேரன் ஆகிய இருவருமே வடிவேலுதானாம். அதில் மிக சுவாரஸ்யமான காமெடி காட்சிகளை எழுதியிருந்தாராம் மாரிமுத்து. வடிவேலுவும் இந்த கதையில் நடிப்பதாக ஓகே சொன்னாராம்.
இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்ததாம். ஆனால் வடிவேலுவின் சம்பள பிரச்சனை காரணமாக இத்திரைப்படத்தை உருவாக்க முடியவில்லையாம். மிக அதிகமாக சம்பளம் கேட்டாராம். ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸும் வாங்கியிருந்தாராம். அந்த அட்வான்ஸை ஏஜிஎஸ் நிறுவனம் “தெனாலி ராமன்” திரைப்படத்திற்காக பயன்படுத்திக்கொண்டதாம்.
ஒரு வேளை வடிவேலு இத்திரைப்படத்தில் நடித்திருந்தால், “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி” படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுக்கு மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்திருக்கலாம்.
இதையும் படிங்க:ஒரே படம்தான்… தப்பா பேசுன வாயெல்லாம் குளோஸ்… எம்.ஜி.ஆர் செய்த துணிகர காரியம்…