இதெல்லாம் கொழுப்பு! அஜித்தை மறைமுகமாக சாடிய வடிவேலு.. வைரலாகும் வீடியோ

by Rohini |   ( Updated:2025-04-30 01:23:33  )
vadivelu
X

vadivelu

Vadivelu Ajith: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கி வருபவர் நடிகர் வடிவேலு. சமீபத்தில்தான் அவர் நடிப்பில் கேங்கர்ஸ் திரைப்படம் வெளியானது. ஆனால் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. வடிவேலுவின் காமெடியில் முன்பு மாதிரி ஒரு புத்துணர்ச்சி இல்லை என்றும் ரசிக்கும் படியாக இல்லை என்றும்தான் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நகைச்சுவைக்கு என சில நடிகர்கள் ஆரம்பகாலங்களில் இருந்தார்கள்.

ஆனால் இப்போது யார் வேண்டுமென்றால் காமெடி பண்ணலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதனால்தான் சின்ன பட்ஜெட் படங்களில் இருந்து பெரிய பட்ஜெட் படங்கள் வரைக்கும் எந்த நடிகரை வைத்தாலாவது காமெடியை சரி செய்து விடுகின்றனர். இந்த நிலையில் வடிவேலுவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதற்கு காரணம் அஜித்தான்.

பத்மபூஷன் விருதை பெற்ற கையோடு அஜித் அங்குள்ள ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அஜித் கால் மேல் கால் போட்டுக் கொண்டு மிகவும் ஸ்டைலாக அதுவும் முழுவதுமாக ஆங்கிலத்தில் பேசியபடியே அந்த பேட்டியை கொடுத்தார். வடிவேலுவின் அந்த வீடியோவும் இது சம்பந்தமாகத்தான் இருந்தது. ஒரு பழைய பேட்டியில் வடிவேலு ‘ஒரு சில பேர் இருக்காங்க சார். சோஃபாவில் சாய்ந்த படி கால் மேல் கால் போட்டுக் கொண்டு தஷ்ஷு புஷ்ஷுனு இங்கிலீஷிலும் பேசிய படி பேட்டி கொடுப்பார்கள்

அந்த சில பேர் யாருனு சொல்ல விரும்பல. நம்மூர்ல பாதி பேரு இங்கிலீஷ் தெரியாமத்தான் இருக்கிறாங்க. இதை பார்த்து நானே திட்டியிருக்கிறேன். கொழுப்ப பாருனு’ என அந்த வீடியோவில் வடிவேலு பேசியிருக்கிறார். இதை டேக் செய்து அஜித்தை பற்றித்தான் வடிவேலு அப்படி அப்பவே பேசியிருக்கிறார். அன்றே கணித்தார் வடிவேலு என்றெல்லாம் கமெண்ட்டில் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே அஜித்துக்கும் வடிவேலுவுக்கும் இடையே சில சண்டைகள் நடந்ததாகவும் ஒரு செய்தி இருக்கிறது. ராஜா, ராசி படங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். இதில் ராஜா படத்தின் போதுதான் அஜித்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை வடிவேலு கொடுக்கவில்லை என்றும் அதற்கு அஜித் தரப்பில் வருத்தப்பட்டதாகவும் ஒரு செய்தி இருக்கின்றது. அதிலிருந்தே வடிவேலு நடிக்கும் படங்களில் அஜித் நடிப்பதில்லை. இப்படி இருக்க மீண்டும் இந்த மாதிரி ஒரு வீடியோவை பரப்பி விட்டு அணைந்த தீயை மீண்டும் கொழுந்து விட்டு எரிய வைத்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.

Next Story