ஒரு கொரோனாவுல மனுசன் இப்படி ஆயிட்டாரே!....ஷாக் கொடுத்த வடிவேலு....
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அவருக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டு சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளர். சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.இந்த படம் தொடர்பாக சமீபத்தில் சுராஜ், வடிவேலு உள்ளிட்ட சிலர் லண்டனுக்கு சென்றனர்.
லண்டனிலிருந்து திரும்பிய அவரை பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகினது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சை பெற்று பின் குணமடைந்தார்.
அதேபோல், அவருடன் சென்ற இயக்குனர் சுராஜுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தற்போது இருவருமே குணமடைந்து விட்டனர். மேலும், லண்டனில் இப்படத்தின் பாடல் கம்போசிங் பணி நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் வடிவேலும், சுராஜ், லைகா சுபாஷ்கரன், சந்தோஷ் சிவன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த புகைப்படத்தில் வடிவேலுவை பார்க்கும் போது கொரோனா பாதிப்பு அவரது உடலை பாதித்திருப்பது தெரிகிறது. மேலும், மீசை எடுத்து ஆள் அடையாளம் தெரியாத படி வடிவேலு மாறியுள்ளார்.