கதை ஒன்னுமே இல்லையே! விஜய் படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு - இப்படித்தான் பண்ணிக்கிட்டு இருந்தாரா?
தமிழ் சினிமாவில் வடிவேலு என்றாலே பிரச்சினை என்றுதான் சமீபகாலமாக அவர் மீது ஒரு கருத்து இருந்தது. அதை அவருடன் நடித்த சக நடிகர்கள் சொல்வதில் இருந்தே அறிய முடிந்தது. ஆரம்பகாலத்தில் இருந்த வடிவேலு வேற.இப்போது இருக்கும் வடிவேலு வேற என்று அவரின் சக நடிகர்களே புலம்பி வருகின்றனர். நடிப்பில் அவரை அடிச்சுக்க யாருமில்லை. ஆனால் சில நாள்களாகவே அவரின் நடத்தையில் வித்தியாசம் தெரிகிறது என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.
கூட நடிக்கும் நடிகர்களிடம் பாரபட்சம் காட்டுவதாகவும் தன்னை விட யாரேனும் ஸ்கோர் செய்து விட்டால் இனிமேல் அந்த நடிகருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பண்ணி விடுவார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்தது. அதற்கு வடிவேலுவும் பதிலளிக்கும் வகையில் என்னை பற்றி தவறாக பேசி வருபவர்கள் நோய்வாய்ப் பட்டு கிடக்கின்றனர், சுகரில் வெந்து போய் கிடக்கின்றனர் என்று சாபம் விடுவது போல பேசியிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க படங்களில் நடிக்கும் போது திடீரென்று இப்படியெல்லாம் நடிக்க முடியாது என சொல்லிவிட்டு விலகியிருக்கிறார். அதன் பிறகு அதே கதாபாத்திரத்தில் விவேக் நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். உதாரணமாக படிக்காதவன் படத்தில் வில்லனின் காலை பிடித்து நடிக்க முடியாது என்று விலக அதே கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருந்தார்.
இப்படி மாதிரியான பல சம்பவங்கள் அரங்கேறியிருக்கிறது. இந்த நிலையில் விஜய் நடித்த குருவி படத்திற்காக உதய நிதி வடிவேலுவை அணுகினாராம். கதையை கேட்ட வடிவேலு இதில் எனக்கு ஏற்ற மாதிரி கதை இல்லையே என்று சொல்லி நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.
உதய நிதியும் பெருந்தன்மையுடன் சென்று விட மீண்டும் ஆதவன் படத்திற்காகவும் வடிவேலுவை உதய நிதி கேட்டிருக்கிறார். அதன் கதை பிடித்துப் போக அந்தப் படத்தில் நடித்தாராம். குருவி படத்தை உதறித்தள்ளிய வடிவேலுவுக்கு பதிலாக விவேக் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஒரு பேட்டியில் வடிவேலுவே கூறியிருந்தார்.
இதையும் படிங்க : ரஜினியின் ஐடியாலஜி! நல்லா வொர்க் அவுட் ஆயிடுச்சு போல – ‘சந்திரமுகி 2’வில் மாஸ் காட்டிய லாரன்ஸ்