சிவாஜி இறந்தப்போ ஒரு செம காமெடி நடந்தது!.. வடிவேலு பகிர்ந்த சம்பவம்!…

பராசக்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சிவாஜி கணேசன். நாடகத்தில் பல வருட அனுபவங்களை பெற்றவர் என்பதால் சினிமாவில் முதல் படத்திலேயே அசால்ட்டாக நடித்து கைத்தட்டலை வாங்கினார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்த சிவாஜி ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக மாறினார்.
ஏதோ நடிக்கிறோம் என இல்லாமல் என்ன கதாபாத்திரமோ அதற்கு உயிர் கொடுத்தார் சிவாஜி. திரையில் அவர் அழுதால் படம் பார்க்கும் ரசிகர்களும் அழுதார்கள். எம்.ஜி.ஆர் சண்டை காட்சிகள் அதிகம் உள்ள கதைகளில் நடித்து ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவாகிக்கொண்டிருந்த நேரம் சிவாஜியோ குடும்ப செண்டிமெண்ட் மற்றும் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில் இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்கிற பேர் சிவாஜிக்கு கிடைத்தது. எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த நடிகராக சிவாஜி இருந்தார். நடிகர் திலகம் என்கிற பட்டமும் இவருக்கு கிடைத்தது. எத்தனையோ படங்களில் அசத்தலான நடிப்பை கொடுத்து பேர் வாங்கினார் சிவாஜி. வயதான பின்னர் குணச்சித்திர நடிகராக மாறினார். வயதான பின்னரும் பாரதிராஜா இயக்கத்தில் முதல் மரியாதை படத்தில் இயல்பாக நடித்து ஹிட் கொடுத்தார்.

கமலுடன் தேவர் மகன், ரஜினியுடன் படையப்பா போன்ற படங்களில் நடித்தார். 2001ம் வருடம் உடல்நலக்குறைவால் நடிகர் திலகம் மரணமடைந்தார். அவரின் இறுதிச்சடங்கில் ரஜினி, கமல் உள்ளிட்ட மொத்த திரையுலகினரும் கலந்துகொண்டனர். வீட்டிலிருந்து இடுகாடு வரை எல்லா விஷயங்களையும் விஜயகாந்த் முன்னின்று செய்தார்.
இந்நிலையில் ஒரு விழாவில் பேசிய நடிகர் வடிவேலு ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். ரஜினி, கமல் என பலரும் வண்டியில் அமர்ந்து சிவாஜி ஐயாவின் இறுதி ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது. அப்போது ஒருவர் கையில் சரக்கு பாட்டில் வைத்து குடித்துக்கொண்டேகூடவே வந்தார். ‘இருந்தது ஒரே நடிகன். அவரையும் கொன்னுட்டீங்களேடா’ என்றார். ஆனந்தராஜை பார்த்து ‘நீதான் வில்லன். நீதான் சிவாஜியை கொன்னுட்ட.. இனிமேல் நீ சினிமாவில் நடிச்ச’ என எச்சரித்தார்.
அவர் சொல்வதை கேட்டு ‘சரியாத்தான் சொல்றாரு. நாமதான் அண்ணனை கொன்னுட்டோம்’ என இளையராஜா சொன்னார். இறுதி ஊர்வலம் முழுவதுமாக அந்த நபர் எல்லா நடிகர்களையும் திட்டிக்கொண்டே வந்தார். சுத்தி நிறைய கேமரா இருந்தது. எனவே, சிரித்தால் அந்த சூழ்நிலையில் நன்றாக இருக்காது என சிரிப்பை அடக்கிக் கொண்டோம். எங்கள் எல்லோரையும் அவன் கொலைகாரன் ஆக்கிவிட்டான்’ என ஜாலியாக பேசியிருந்தார்.