கோவை சரளாவின் கெரியரையே காலி பண்ண வடிவேலு!.. குடும்பத்தையே கூண்டோடு விரட்டிய சம்பவம்..
கோவையை சொந்த ஊராக கொண்ட கோவை சரளா சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு முதலில் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். பல நாடகங்களை அரங்கேற்றிய கோவை சரளாவின் ஒரு நாடகத்தை பார்த்து விட்டு இப்படி கொங்கு தமிழை அழகாக பேசக்கூடிய நடிகை விடக் கூடாது என பாக்யராஜ் தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.
ஏற்கெனவே புதுமுகங்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி வந்த பாக்யராஜ் கண்ணில் கோவை சரளா பட்டதும் ‘முந்தானை முடிச்சு’ என்ற படத்தில் அறிமுகமாக்கினார். அந்தப் படத்தில் கோவை தமிழோடு அவர் பேசிய வசனம் அனைவரையும் ஈர்த்தது. அதன் பின் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.
பின் ஜப்பானில் கல்யாணராமன் படத்தின் மூலம் தான் கோவை சரளாவை அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர். கமலுக்கு ஜோடியாக சதிலீலாவதி படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் கோவை சரளா. ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, அம்பிகா, ராதா என முன்னனி நடிகைகள் கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்த நேரத்தில் கோவை சரளா கமலுக்கு ஜோடியா என அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தனர்.
ஆனால் அந்த படத்தில் இருந்து தான் கமலுக்கு ஏற்ற ஜோடி கோவைசரளாதான் என்று பேசும் அளவுக்கு சரளா அழகான நடிப்பை வெளிப்படுத்தினார். சரளாவின் வாழ்க்கையில் மற்றுமொரு திருப்புமுனையாக அமைந்த படமாக கரகாட்டக்காரன் படம் அமைந்தது. கவுண்டமண், செந்திலிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் அவரது கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்தது.
அதே போல் கோவை சரளாவிற்கு ஜோடியாக எஸ்.எஸ்.சந்திரன் இருந்தார், அவருக்கு பிறகு சரியான ஜோடியாக வடிவேலுதான் இருந்தார். வடிவேலுவும் கோவை சரளாவும் சேர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்தனர். சொல்லப்போனால் அந்த நேரம் பல ஊடகங்கள் சரளாவினால்தான் வடிவேலுவின் மார்கெட் உயர்ந்து நிற்கின்றது என்றெல்லாம் பேச ஆரம்பித்தனராம்.
வடிவேலுவை பற்றிதான் அனைவருக்கும் தெரியுமே. படத்திலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி தன்னை விட அதிகமாக யார் ஸ்கோர் செய்தாலும் அவர்களின் கெரியரை காலி பண்ணுவதையே குறிக்கோளாக வைத்திருந்தவர்.
அதனாலேயே சரளாவுடனான பட வாய்ப்புகள் வரும் போது சரளா நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று வடிவேலு சொல்லிவிடுவாராம்.
இதையும் படிங்க : அஜித் அனைவரையும் சந்திக்க மறுப்பதற்கு காரணம்!.. ரகசியத்தை பகிர்ந்த தயாரிப்பாளர்..
ஆனால் வடிவேலு படத்திற்கு முக்கியம் என்பதால் சரளாவை ஒதுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதனாலேயே தமிழில் ஒரு கட்டத்திற்கு மேலாக கோவை சரளாவை படங்களில் பார்க்க முடியாமல் போனதாம். அதே நேரம் ஆந்திரா கோவை சரளாவை வரவேற்க தொடங்கியது. அங்கு அவரின் மார்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். மேலும் திருமணமாகாமல் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பார்த்து வந்த கோவை சரளா தன் குடும்பத்தையே ஆந்திராவிற்கு சிஃப்ட் பண்ணி விட்டாராம். அதன் பிறகு லாரன்ஸ் மூலமாகத்தான் மீண்டும் தமிழில் காஞ்சனா படத்தின் மூலம் ரீ என்ரி கொடுத்தாராம் கோவை சரளா. இந்த செய்தியை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார்.