அடிபட்டு இன்னும் திருந்தலையா?... லைக்கா மூலம் ஷங்கரை பழி வாங்குகிறாரா வடிவேலு?....
எந்த நேரத்தில் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை துவங்கினாரோ அவருக்கு பிடித்தது சனி. லைக்கா நிறுவனம் தயாரிக்க கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், சித்தார்த், காஜல் அகர்வால் என பலரும் நடிக்க படப்பிடிப்பு சில நாட்கள் நடந்தது. ஆனால், படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியானது, கமல்ஹாசனின் கால்ஷிட் பிரச்சனை என படப்பிடிப்பு தடைபட்டது.
2 வருடங்கள் பொறுத்துப்பார்த்த ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார். எனவே, அவருக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக லைக்கா நிறுவனம் ஷங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தியன் 2-வை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் என லைக்கா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தீர்ப்பு ஷங்கருக்கு ஆதரவாக வெளியானது.
இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு லைக்கா சுபாஷ்கரனும், ஷங்கரும் நேரில் சந்தித்து பேசி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். எனவே, இந்தியன் 2வை முடித்துவிட்டு ஷங்கர் தெலுங்கு படத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஷங்கரும் அந்த மனநிலைக்கு வந்துவிட்டாராம்.
இந்நிலையில், திடீரென லைக்காவிலிருந்து ஷங்கருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பப்படுள்ளதாம். இதனால், ஷங்கர் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். அதோடு, இதற்கு பின்னணியில் வடிவேலு இருக்கலாம் என அவர் சந்தேகப்படுகிறாராம்.
அதற்கு காரணமும் இருக்கிறது. லைக்காவுக்கு 2 படங்கள் நடித்துகொடுக்க வடிவேல் சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது லைக்காவோடு நெருக்கமாக இருக்கும் அவரே இதன் பின்னணியில் இருக்கலாம் என கருதப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் கொடுத்த புகாரில்தான் வடிவேலுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டு கடந்த 4 வருடங்கள் வீட்டில் இருந்தார் வடிவேலு.
தற்போது லைக்கா மூலம் அந்த கோபத்தை வடிவேலு தீர்த்துக்கொள்கிறாரோ என்கிற சந்தேகம் திரையுலகினருக்கு மட்டுமல்ல, ஷங்கருக்கும் வந்துள்ளதாம்.. இதையடுத்து, எவ்வளவு அடிபட்டாலும் வடிவேலு திருந்தவில்லை என திரையுலகினர் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வடிவேலு ‘இனிமே ஷங்கர் சங்காத்தமே வேணாம்.. இனி இந்த வைகைப்புயல் ஷங்கர் பக்கம் வீசாது’ என்றெல்லாம் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.