‘சின்னக்கவுண்டர்’ படத்தில் ஒன்னுமே இல்லாத கேரக்டர்! இப்படி சொல்லிட்டாரே வடிவேலு

vadivelu (2)
Vadivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து காமெடி கிங்காக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த வடிவேலுவுக்கு அடுத்தடுத்து பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. காமெடியன் என்றாலே படமுழுக்க ஹீரோக்களுடன் டிராவல் செய்வதுமாதிரி அமைந்தால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று விடலாம்.
அப்படி துணை நடிகராக இருந்த வடிவேலுவை தொடர்ந்து ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கொடுத்தது ஆர்.வி. உதயகுமார். இதை பற்றி சமீபத்தில் வடிவேலுவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தொடர்ந்து 10 படங்களில் ஹீரோக்களுடன் சேர்ந்து என்னை ஆர் வி உதயகுமார்தான் நடிக்க வைத்தார். அதில் சின்னக்கவுண்டர் படத்தில் குடை பிடிப்பது மாதிரியான கேரக்டர். அதுவும் ஒரு சாதாரண கேரக்டர்தான்.
அப்ப கூட பல பேர் அந்த நேரத்தில் எனக்கு வேட்டி சட்டை எல்லாம் வாங்கிக் கொடுத்தார் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு வேட்டி சட்டை அதுவும் இரண்டு செட்டுதான் தயாரிப்பாளர்தான் வாங்கிக் கொடுத்தார் என்று வடிவேலு கூறினார். இவர் மறைமுகமாக விஜயகாந்தை பற்றித்தான் கூறினார். ஏனெனில் சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலுவுக்கு வேட்டி சட்டை எல்லாம் விஜயகாந்த் தான் வாங்கிக் கொடுத்தார் என நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.

அதை குறிப்பிட்டே வடிவேலு இப்படி கூறியிருக்கிறார். விஜயகாந்தும் வடிவேலுவும் ஆரம்பத்தில் மிக நெருக்கமாக வடிவேலுவின் மீது விஜயகாந்த் அதிக அக்கறை கொண்டவராக இருந்திருக்கிறார். ஏன் பல சினிமா மேடைகளில் இருவரும் சேர்ந்து காட்சிகளில் நடித்திருக்கின்றனர். எப்போது வடிவேலு அரசியலுக்குள் நுழைந்தாரோ அவரின் புகழ் குறைய தொடங்கியது.
விஜயகாந்துக்கு எதிராக கடுமையாக மேடைகளில் சாடி வந்தார் வடிவேலு. அதிலிருந்தே சினிமாத்துறையினருக்கும் மக்களுக்கும் வடிவேலு மீது இருந்த மரியாதையும் குறைய தொடங்கியது. இப்போதுதான் ஒவ்வொரு படங்களாக வடிவேலு நடித்து வருகிறார். அவர் நடித்த கேங்கர்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதன் புரோமோஷனில்தான் வடிவேலு இப்போது கலந்து கொண்டு வருகிறார்.