இந்த உண்மையை சொல்லியே ஆகணும்.. எவனும் வாழ வைக்கல! வடிவேலு பகீர் பேட்டி

by Rohini |   ( Updated:2025-04-23 11:16:17  )
vadi
X

vadi

vadivelu: வடிவேலு சுந்தர் சி காம்போவில் நாளை ரிலீஸாக கூடிய திரைப்படம் கேங்கர்ஸ். இந்தப் படத்தை பற்றி பெரிய அளவில் சுந்தர் சியும் வடிவேலுவும் மாறி மாறி பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். அதில் வடிவேலுவிடம் ராஜ்கிரணுக்கும் உங்களுக்குமான நட்பை பற்றி கூறுங்கள் என கோபிநாத் ஒரு கேள்வியை முன் வைத்தார். உடனே வடிவேலு ‘ஹாம்.. இப்பதான் மேட்டருக்கு வர்றீங்க. சரியான கேள்வி. இந்த உண்மையை சொல்லியே ஆகணும் ’ என வடிவேலு அதற்கு பதில் அளித்தார்.

வடிவேலுவை பொறுத்தவரைக்கும் அவர் முதலில் நடித்த படம் ராஜ்கிரணுடன் என் ராசாவின் மனசிலே திரைப்படம். ஆனால் அதற்கு முன்பே டி.ராஜேந்திரனின் என் தங்கை கல்யாணி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார். இந்த கேள்விக்கு பதில் சொல்லும் போது முதலில் ஒரு படத்தில் நடித்து விட்டு ரொம்ப கேப் விட்டேன். அப்போதுதான் ராஜ்கிரண் ஒரு திருமணத்திற்காக எங்க ஊருக்கு வந்தார். அவரை ஒரு நண்பர்தான் அழைத்துக் கொண்டு வந்தார். அந்த நண்பர் என் தம்பிக்கும் நண்பர்.

அதனால் என்னுடைய தம்பி அந்த நண்பரிடம் ‘என் அண்ணனை பற்றி ராஜ்கிரணிடம் சொல்லு’ என கூறியிருக்கிறார். அதே போல் அந்த நண்பரும் ராஜ்கிரணிடம் ‘எனக்கு ஒரு ஆளை தெரியும். நல்ல எண்டெர்டெயின்மெண்ட் பண்ணுவான்’ என சொல்லி வடிவேலுவை அழைத்து வந்திருக்கிறார். மதிய நேரத்தில் இருந்து இரவு ராஜ்கிரண் டிரெயின் ஏறும் வரைக்கும் அன்று வடிவேலுதான் ஃபுல் எண்டெர்டெயின்மெண்ட் பண்ணிக் கொண்டிருந்தாராம்.

சரியாக இரண்டு மாதங்கள் கழித்து வடிவேலுவை நியாபகப்படுத்தி என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார் ராஜ்கிரண். அதிலிருந்து நான்கு வருடங்கள் ராஜ்கிரண் அலுவலகத்திலேயே இருந்தாராம் வடிவேலு. ராஜ்கிரணின் போன் நம்பர், முகவரிதான் வடிவேலுவின் முகவரியாகவும் இருந்திருக்கிறது. அந்தப் படத்திற்கு பிறகு ஆர் வி உதயகுமாரின் தொடர்ந்து10 படங்களில் நடித்திருக்கிறார்.

சின்னக்கவுண்டர், தேவர் மகன், கிழக்குச் சீமையிலே, பிரபுவுடன் சேர்ந்து படம், காதலன் என நடித்துக் கொண்டே இருந்தாராம். டர்னிங் பாயிண்டாக இருந்தது தேவர் மகன் திரைப்படமாம். அதுவரைக்கும் ராஜ்கிரண் அலுவலகத்தில்தான் தங்கி இருந்தாராம். ஆனால் ராஜ்கிரண் சம்பளம் என எதுவும் கொடுக்கவில்லை. கூடவே இருந்து பார்த்துக் கொண்டார். அதிலிருந்து நானே ராஜ்கிரணிடம் சொல்லி விலகிக் கொள்கிறேன் என விலகி வந்து விட்டாராம் வடிவேலு. ஆனால் ஊரிலிருந்து வேட்டி சட்டையுடன் தான் வந்தேன்.

அம்மணமாக வரவில்லை. ஆனால் எவன் எவனோ சொல்றான் ‘வேட்டி சட்டை வாங்கி கொடுத்தாரு, தாலாட்டுனாரு, ஊட்டுனாரு’ என்றெல்லாம் சொல்றாங்க. அப்படி இல்லை. ராஜ்கிரண் சார் தான் அச்சாரம் போட்டார். இப்போ சுந்தர் சி வரைக்கும் வந்து நிற்கிறேன் என வடிவேலு கூறினார்.

Next Story