சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?!.. நிஜ சம்பவத்தை காமெடியாக்கிய வடிவேலு!..

#image_title
தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகராக இருந்தவர் வடிவேலு. ஏன் இருந்தார் என சொல்கிறோம் எனில் வடிவேல் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு இபோது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு வடிவேலுதான் காரணம் என்பது வேறு விஷயம்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ராஜ்கிரணின் அலுவலகத்தில் பல வருடங்கள் தங்கியிருந்து வாய்ப்புகளை பெற்றவர்தான் வடிவேலு. தான் ஹீரோவாக நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலுக்கு சில காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் ராஜ்கிரண். அதன்பின் சின்னக்கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் வடிவேலு.
சிறந்த நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். ஒருகட்டத்தில் பல படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார். வடிவேலுவை நம்பி பல சின்ன சின்ன காமெடி நடிகர்களும் இருந்தனர். வடிவேலுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. சினிமாவில்தான் காமெடி நடிகர். நிஜவாழ்வில் பக்கா வில்லன். இது அவருடன் நடித்த எல்லா நடிகர்களுக்கும் தெரியும்.

தன்னுடன் நடிக்கும் சின்ன காமெடி நடிகர்களை மிகவும் மட்டமாக நடத்துவார். கோபம் வந்தால் கை நீட்டியும் அடிப்பார். அவர்களுக்கு தயாரிப்பளாரே அதிக சம்பளம் கொடுக்க முன்வந்தால் ‘அவ்வளவெல்லாம் கொடுக்கக் கூடாது’ என சொல்லிவிடுவார். வாய்ப்பு தேடி தனது அலுவலகத்திற்கு வந்தால் மணிக்கணக்கில் நிற்க வைப்பார். உட்கார்ந்துவிட்டால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டார். இப்படி வடிவேலுவை பற்றி ரசிகர்கள் தெரியாத சில பக்கங்கள் இருக்கிறது.
4 வருடங்கள் நடிக்காமல் இருந்து வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டன்ஸ் படமும் ஓடவில்லை. எனவே, இப்போது மீண்டும் காமெடியனாக நடிக்க துவங்கியுள்ளார். சுந்தர்.சியுடன் இணைந்து கேங்கர்ஸ் படத்தில் நடித்திருந்தார். வடிவேலுவின் காமெடியில் ஹைலைட்டாக அமைந்த படம் வின்னர். இப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் அடிவாங்கிவிட்டு சட்டையெல்லாம் கிழிந்தபடி வரும் வடிவேலு ‘சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு?’ என வசனம் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய வடிவேலு இந்த காமெடி எப்படி உருவானது என சொல்லியிருக்கிறார். மதுரையில் என் நண்பன் ஒருவன் இருந்தான். கையில் செலவுக்கு பணம் இல்லை என்றால் வழியில் யார் வந்தாலும் மறித்து பேசியோ, மிரட்டியோ காசை வாங்கிவிடுவான்.
ஒருநாள் ஒருவனை பார்த்துவிட்டு ஒரு புதருக்குள் ஓடினான். இவன் காசு வாங்க நினைத்தவன் ஒரு பிக்பாக்கெட். அவனிடம் போய் காசு கேட்க அவன் கோபத்தில் பிளேடை எடுத்து உடம்பெல்லாம் கீறியதோடு சட்டையையும் கிழித்து அனுப்பிவிட்டான். காயத்தோடு வந்தவனை பார்த்து ‘என்னப்பா ஆச்சி?’ என நான் கேட்க அவனோ ‘அவன போட்டு செதச்சிட்டேன். சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு’ என சொல்லி சமாளித்தான். அதைத்தான் வின்னர் படத்தில் பயன்படுத்தினேன்’ என சொல்லியிருக்கிறார்.