வடிவேலு ஒன்னும் தானா ஜெயிக்கல!.. காரணமே நாங்கதான்!.. ஆக்ரோஷத்தை வெளிக்காட்டிய நடிகர்..

vadivelu
தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண துணை காமெடி நடிகராக இருந்து இன்று அவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு வளர்ந்து நிற்பவர் நடிகர் வைகைப்புயல். ஆனால் சமீபகாலமாக அவரின் மார்கெட் குறைந்திருந்தாலும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை அவரின் வளர்ச்சி அபாரமானது.

vadivelu
தன்னுடைய உடல் அசைவுகளாலும் முகபாவனைகளாலும் அனைவரையும் சிரிக்க வைத்தவர் வடிவேலு. ஆனால் அவரின் வளர்ச்சி எட்ட எட்ட அவரின் குணாதிசயங்கள் மாறியதாக அவரை சுற்றி இருந்தவர்கள் சமீபகால பேட்டிகளில் கூறிவருகிறார்கள்.
மேலும் அவருடன் நடித்த துணை நகைச்சுவை நடிகர்களை மதிப்பதில்லை என்றும் அவர்களை விட தன்னுடைய காட்சிகள் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக துணை நடிகர்களிடம் கறாராக நடந்து கொள்வார் என்றும் பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

vadivelu
அதிலும் குறிப்பாக பிரபல காமெடி நடிகர் சிஸ்ஸர் மனோகர் பல வருடங்களாக விவேக் மற்றும் வடிவேலு ஆகியோருடன் சேர்ந்து பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவர் சமீபகாலமாக வடிவேலுவை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் வடிவேலுவின் காமெடி காட்சிகள் சார்ந்த மீம்ஸ்களை தான் தற்போது வரை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம், அந்த அளவுக்கு அவரின் காமெடி பேசப்பட்டது, அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்.

vadivelu scissor manohar
அதற்கு ஆக்ரோஷமான பதிலை தந்தார் சிஸ்ஸர் மனோகர். அதாவது ‘வடிவேலு காமெடியில் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார் என்றால் அது அவருடைய தனிப்பட்ட வெற்றி அல்ல, அவரை சுற்றி இருந்த நான், போண்டா மணி என சக நடிகர்கள் சேர்ந்து நடித்ததால் தான் கிடைத்த வெற்றி’ என கூறியிருந்தார்.
இதையும் படிங்க : எல்லாரும் சிரிச்ச படம்!.. ஆனா சீரியஸா பார்த்த கமல்!.. மிர்ச்சி சிவா பகிர்ந்து சுவாரஸ்ய தகவல்!…
மேலும் வடிவேலு சமீபத்தில் நடித்த படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் ஏன் ஓடவில்லை. அவர் மட்டும் தானே நடிச்சாரு? ஆனால் படம் ஏன் ஓடல? ஏன்னா அவர் கூட யாரும் இல்ல, இப்பொழுது தெரிகிறதா? அவரின் வெற்றி எப்படி நடந்தது என்று? என்று சிஸ்ஸர் மனோகர் பதிலளித்தார்.