கூப்பிட்டு வச்சு அடிச்சாங்க! வடிவேலுவை இமிடேட் செய்த நடிகருக்கு நடந்த கொடூரம்
திரையுலகில் நடிகர் வடிவேலுவை பற்றி தொடர்ந்து பல சர்ச்சைகள் கிளம்பி வந்து கொண்டே இருக்கின்றன. அவருடன் நடித்த சக நடிகர்கள் அவமானப்படுவதும் வடிவேலுவால் விரட்டப்படுவதும் என பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதைப் பற்றி அந்த நடிகர்களே தங்களுடைய பேட்டிகளின் மூலம் தெரிவித்து இருக்கின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே ஆரம்பத்தில் வடிவேலுவை பற்றி முதன் முதலில் இணையத்தில் பகிர்ந்தவர் நடிகர் காதல் சுகுமார். ஆனால் அவருடைய இந்த பேட்டி இப்போது வைரலாகி வருகின்றது. அதாவது சுகுமாரும் மதுரை மாவட்டத்தில் இருந்து வந்தவர் தான். பார்க்க வடிவேலுவை போல் இருப்பதால் ஆரம்பத்தில் இவரை வடிவேலு மாதிரி மிமிக்ரி செய். வாய்ப்புகள் கிடைக்கும் என கூறியதன் மூலம் சீரியலிலும் சில மேடை நாடகங்களிலும் வடிவேலுவை மாதிரி இமிட்டேட் செய்து நடித்து அதன் மூலம் வரவேற்பை பெற்றார்.
அதன் தொடர்ச்சியாக ராஜ் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான ஊர் வம்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அதன் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த ஒரு வாய்ப்பினால் தான் படங்களில் நடிக்க அவருக்கு தொடர்ந்து சான்ஸ் கிடைத்துக் கொண்டே இருந்தது. காதல், கலகலப்பு, விருமாண்டி போன்ற பல படங்களில் இவரை நாம் பார்த்திருப்போம்.
ஒரு கட்டத்தில் சுகுமார் இனிமேல் வடிவேலு மாதிரி நாம் நடிக்க கூடாது. நம் திறமையை நாம் காட்ட வேண்டும் என்ற முடிவெடுக்க அதன் அடுத்த கட்டமாக தன் நகர்வை கொண்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் திடீரென வடிவேலுவிடம் இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது. சுகுமார் வடிவேலுவை போய் பார்க்க அவரிடம் வடிவேலு நீ என்னை மாதிரியே நடிக்கிறாயாமே எனக் கேட்டாராம். அதற்கு சுகுமார் "ஆமாம் அண்ணே, அதன் மூலம்தான் என் தங்கைகளை படிக்க வைத்திருக்கிறேன் .இப்பொழுது ஒரு நல்ல இடத்திலும் இருக்கிறேன்" என கூறினாராம்.
இதைக் கேட்டதும் வடிவேலு நல்லது நல்லது எனக் கூறிவிட்டு அவரிடம் தொடர்ந்து பேச ஒரு சமயத்தில் தவசி படத்திற்காக வடிவேலுக்கு பதிலாக சுகுமாரை டூப் போட்டு நடிக்க கேட்டார்களாம். ஏனெனில் அந்த நேரத்தில் வடிவேலுவுக்கு ஏதோ காலில் விபத்து ஏற்பட அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லையாம். அதனால் மீதமுள்ள காட்சிகளை சுகுமாரை வைத்து நடிக்க கேட்டிருக்கிறார்கள் .ஆனால் சுகுமார் மறுத்துவிட்டாராம். இதைப்பற்றி வடிவேலு சுகுமாரிடம் கேட்டாராம். ஆனால் சுகுமார் "இல்ல அண்ணே, என்னிடம் கேட்டார்கள் .நான் மறுத்து விட்டேன்" எனக் கூறியிருக்கிறார்.
இப்படியே பேச்சு போய்க் கொண்டே இருக்க திடீரென அங்கு இருந்த சில பேரை வெளியே அனுப்பிவிட்டு வடிவேலுவுக்கு நெருக்கமான ஆட்கள் உள்ளே வர அவர்கள் சுகுமாரின் மேல் கை வைத்தார்களாம். கோபத்தில் சுகுமாரும் "யோவ் பேசிக்கிட்டே இருக்கும்போது கைய வைக்க "என குரலை ஒசத்த பக்கத்தில் இருந்த ஒரு ஆள் சுகுமாரை சரமாரியாக தாக்கினாராம் .அதில் வாயிலிருந்து ரத்தமே வந்து விட்டதாம். உடனே எந்த ஊருடா உனக்கு என கேட்டார்களாம்.
இதையும் படிங்க :அந்த படத்தை வேணும்னா கேன்சல் பண்ணிடுவா?. ரஜினியை மிரள வைத்த நடிகை…
ஊர் பெயரை சொல்லிவிட்டு என்னுடைய தாத்தா சங்கிலி முருகன் என சொல்லி இருக்கிறார். உடனே சங்கிலி முருகனும் ஒழுங்கு மரியாதையா அவன விட்ருங்க என கொஞ்சம் மிரட்டி இருக்கிறார். அதன் பிறகு வடிவேலுவின் ஆட்கள் "அவர் பேரன் என்று கொஞ்சம் சொல்லி இருக்கலாம் இல்ல" என சொல்லிவிட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்களாம். இதை சுகுமார் ஒரு பேட்டியின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.