ரீல்ஸ் போடுறவங்களை எல்லாம் நடிக்க வச்சா வெளங்குமா? கொதிக்கும் வடிவுக்கரசி

by sankaran v |
vadivukkarasi
X

#image_title

தமிழ்த்திரை உலகில் நடிப்பு என்று வந்துவிட்டால் ஒரு சில நடிகைகள்தான் கெத்து காட்டுவார்கள். அவர்களில் அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை இவரை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. அதுதான் வடிவுக்கரசி.

இவர் கருடன், விருமன், ஜகமே தந்திரம், கண்ணே கலைமானே, இறைவி, படையப்பா, அருணாச்சலம், சிவாஜி, எங்கள் அண்ணா, வான்மதி, சிகப்பு ரோஜாக்கள், வைதேகி காத்திருந்தாள், படிக்காதவன், மிஸ்டர் பாரத், மகராசன், வருஷம் 16 என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். அருணாச்சலம் படத்தில் கூனியாக வந்து முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் மிரட்டி இருப்பார்.

vadivukarasi

vadivukarasi

இந்தப் படத்தில் வில்லி அவர்தான். ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ளார். முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடித்திருந்தார். கொடுக்குற கேரக்டர் எதுவானாலும் சரி. சூப்பர் பர்ஃபார்மன்ஸைக் காட்டத் தவற மாட்டார். அவருக்கு தற்போதைய நடிகர்களில் மிகவும் பிடித்தவர் விஜய் சேதுபதி.

அவர் என் புள்ள மாதிரி. அழகாகவும், யதார்த்தமாகவும் நடிக்கிறார். சாகும்போது என் பக்கத்துல இருக்கணும்னு எல்லாம் சொல்லி சமீபத்தில் பரபரப்பைக் கிளப்பினார். அந்த வகையில் இப்போதும் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். என்னன்னு தான் பாருங்களேன்.

சிலர் ரீல்ஸ் பண்றாங்க. அவங்களுக்கு இருக்குற ஃபாலோயர்ஸைப் பார்த்து இயக்குனர்கள் சினிமாவுல வாய்ப்பு கொடுக்குறாங்க. நான் நடிக்கும்போது புதுசா வந்து நடிக்கிறவங்க டயலாக் சொல்ல திணறுறாங்க.

பெரிய நடிகர்கள், நடிகைகள் நடிச்ச பாட்டுக்கு, இவங்க வெறும் வாய் மட்டும் அசைச்சி ரீல்ஸ் போடுறாங்க. ஆனா படத்துல அவங்களுக்குன்னு உண்மையான டயலாக் கொடுக்கும்போது அங்க வந்து திணறுறாங்க. கேட்டா அவங்களுக்கு பல லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்காங்கன்னு சொல்றாங்க. இயக்குனர் பல லட்சம் ஃபாலோயர்ஸை நம்பி இவங்களை போட்டுட்டு எல்லாரோட நேரமும் வீணாகுது என்று கொதிக்கிறார் நடிகை வடிவுக்கரசி.

Next Story