1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தமிழர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். விடுதலை புலிகள் இயக்கத்தை தொடக்கத்தில் இருந்தே திமுக ஆதரித்து வந்ததால் பலரும் ராஜீவ் காந்தி கொலைக்கு திமுகதான் காரணம் என்பது போன்ற வதந்தியை பரப்பி வந்தனர்.
ஆதலால் திமுக அபிமானிகளின் வீட்டில் கல்லெறி தாக்குதல்கள் நடந்தது. இதில் வைரமுத்துவின் வீடும் அடக்கம். வைரமுத்துவின் வீட்டில் கல்லெறி தாக்குதல் நடந்தபோது தனது குழந்தைகளுடன் தனது வீட்டில் இருந்த டைனிங் டேபிளுக்கு அடியில் பதுங்கிக்கொண்டாராம்.
அந்த சமயத்தில் திரைத் துறையைச் சேர்ந்த யாரும் வைரமுத்துவை சந்திக்க வரவில்லையாம். ஒருவரைத் தவிர. அதாவது ஏவிஎம் சரவணன் வைரமுத்துவின் வீட்டிற்கு வந்து ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை சாமான்களையும் தந்துவிட்டுப் போனாராம்.
ஏவிஎம் சரவணனை தவிர திரைத்துறையை சேர்ந்த யாரும் தன்னை காண வரவில்லை என்ற கவலையில் அவர் அன்று ஒரு முக்கியமான முடிவை எடுத்தாராம்.
அதாவது இனிமேல் யாருக்கும் நட்புக்காக பாடல் எழுதித்தரக்கூடாது, காசு கொடுத்தால்தான் பாட்டு, இல்லையென்றால் பாடல் எழுதுவது கிடையாது என்ற முடிவுக்கு வந்தாராம் வைரமுத்து. இந்த சம்பவம் குறித்து சமீபத்திய வீடியோவில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், “அந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் பொது நலமாக இருக்கக்கூடாது, சுயநலமாக இருக்க வேண்டும் என வைரமுத்து முடிவெடுத்தார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதலித்த பெண்ணால் மணிரத்னம் படத்தில் இருந்து வெளியேறிய அஜித்… ஆனா அது ஷாலினி கிடையாது… யாரா இருக்கும்!!
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…