வடிவேலுவுக்கு பாட்டா? எழுத முடியாதுனு சொன்ன வைரமுத்து... அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்

by Rohini |
vadi
X

vadi

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. தன் உடல் மொழியாலும் முக பாவனையாலும் அனைவரையும் சிரிக்க வைப்பதில் வல்லவர். மதுரையில் இருந்து ஒரு சாதாரண மனிதராக வந்த வடிவேலு ஆரம்பகாலங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நகைச்சுவை செய்து கொண்டிருந்தார்.

கவுண்டமணி செந்தில் இவர்களுக்கு பிறகு அந்த இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டார் வடிவேலு. தன்னை சுற்றி ஒரு சில துணை நடிகர்களை க்ரூப்பாக வைத்துக் கொண்டு அவர்களுடன் நகைச்சுவையில் கலக்கி வந்தார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் இல்லையா? அட இது என்னப்பா புது கதை…

நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த பாடகராகவும் மாறினார் வடிவேலு, அவர் பாடிய முதல் பாடல் ‘எட்டனா இருந்தா எட்டூரு எம்பாட்டு கேக்கும்’ என்ற பாடல். அந்தப் பாடலை இன்றளவும் கேட்கும் போது ஆடாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த பாடல்.

அதிலிருந்தே வடிவேலுவின் குரலுக்கு இந்த சினிமா அடிமையாகி விட்டது. அப்படி ஒரு படத்தில் வடிவேலு பாட அந்த பாடலுக்கு வரிகள் எழுத மாட்டேன் என வைரமுத்து கூறிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சேரன் இயக்கத்தில் வெளியான படம் ‘பாரதிகண்ணம்மா’. ஹென்றி இந்தப் படத்தை தயாரிக்க முதலில் வைரமுத்துதான் எல்லா பாடலுக்கும் வரிகள் எழுதுவதாக இருந்தது.

இதையும் படிங்க: தளபதி69 இல்லங்க… தளபதி70 தான் விஜயின் கடைசி படம்… கசிந்த மாஸ் அப்டேட்.. போட்றா வெடிய…

அதில் ஒரு பாடல் வடிவேலு பாடினால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் ஹென்றி கூற சேரன் வடிவேலு பாடும் பாடலே இந்தப் படத்தில் வேண்டாம் என சொல்லி மல்லுக் கட்டியிருக்கிறார். ஆனால் தயாரிப்பாளரோ அவர் முடிவில் உறுதியாக இருக்க நேராக வைரமுத்துவிடம் அந்த பாடலுக்கான வரிகளை கொடுங்கள் என கூற வைரமுத்துவோ சேரன் சொல்லாமல் நான் எழுத மாட்டேன் என கூறியிருக்கிறார்.

உடனே தயாரிப்பாளர் ஹென்றி அந்த பாடலுக்கு வாலியை எழுத சொல்லிவிட்டாராம். அப்படித்தான் பாரதிகண்ணம்மா படத்தில் வடிவேலு பாடிய பாடல் உருவாகியிருக்கிறது.

இதையும் படிங்க: வீக் எண்டுக்கு இது செம ட்ரீட்டு!.. சைனிங் உடம்பை காட்டி சூடேத்தும் ரச்சிதா!..

Next Story