அந்த விஷயத்துக்கு ஐடியா சொன்ன வைரமுத்து... பாவம்... அவருக்கே தெரியாதாம்..!
அந்தக் காலத்தில் பெரியவர்கள் கோபப்பட்டால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் இப்போது இளம் தலைமுறைகளுக்கு எதற்கெடுத்தாலும் கோபம் தான் வருகிறது. அப்பா பிள்ளையிடம் பேச முடியவில்லை. அம்மா மகளிடம் பேச முடியவில்லை.
கணவன் மனைவிக்குள் ஒரே சண்டை, சச்சரவு. எங்கு பார்த்தாலும் ஈகோ தான் தலைவிரித்தாடுகிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா...என்ற கேள்வியே எழுகிறது.
இதையும் படிங்க... காதும் காதும் வச்ச மாதிரி நடந்த சந்திப்பு! பெரிய நடிகருடன் காதல் வயப்பட்ட மீனா?..
கோபமே வராத மனிதர்கள் இருக்கவே முடியாது. சிலர் எதற்கெடுத்தாலும் சிடுமூஞ்சி போல கோபப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்க முகம் களையாகவே இருக்காது. அதே நேரம் புன்சிரிப்போடு இருப்பவர்களைப் பார்த்தால் ஒரு வசீகரம் தெரியும்.
கோபம் வருவது நல்லது தான். பாரதியாரே 'ரௌத்திரம் பழகு' என்று தான் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் அதைக் குறைக்கவும் வழி தெரிய வேண்டும். இல்லேன்னா அது பிரஷர் ஏறி உடல்நலத்தைப் பாதித்து விடும்.
கோபம் நமக்கு எதனால் வருகிறது? மற்றவர்கள் செய்கின்ற தவறுகளால் தான் வருகிது. அந்தத் தவறுகளை எல்லாம் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வது தான் அந்த நகைச்சுவையைக் குறைப்பதற்கு வழி என்று சொல்வேன் என்கிறார் கவிப்பேரரசர் வைரமுத்து.
மூதறிஞர் ராஜாஜி தன் வேலைக்காரரை அழைத்து ஒரு கவரைக் கொடுத்து இதுல இந்த தபால்தலையை ஒட்டிக் கொண்டு வா என்று சொல்கிறார். அதற்கு அவர் பிரிட்டிஷ் மேனின் தபால்தலையைத் தலைகீழாக ஒட்டிக் கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க... நாயகன் படத்துக்கு முன்னோடி எந்தப் படம்னு தெரியுமா? அடேங்கப்பா எங்கே போய் சுட்டுருக்காங்கன்னு பாருங்க…!
அதைப் பார்த்தா யாரா இருந்தாலும் கோபத்துல வெடிச்சி சிதறுவாங்க. 'தபால் தலையை இப்படி தலைகீழா ஒட்டிட்டு வந்துருக்கீயே... உனக்கு அறிவு இருக்கா?'ன்னு கேட்பாங்க. ஆனா ராஜாஜி அப்படி எதையும் செய்யல. 'பரவாயில்லையே... நாங்க இவ்வளவு காலம் முயன்றும் செய்ய முடியாததை சர்வசாதாரணமாக செய்து விட்டீயே... அந்த ராஜாவையே தலைகீழா கவிழ்த்திட்டீயே' என்றாராம்.
எல்லாம் சரி தான். தலைப்புல ஒண்ணு கொடுத்துட்டு உள்ளே எதுவும் இல்லையேன்னு கேட்குறீங்களா... அது வேற ஒண்ணுமில்ல. இந்த சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட வைரமுத்து 'ராஜாஜியால் அது முடிந்தது. என்னால் அது முடியுமா என தெரியவில்லை' என்றாராம். இந்த தகவலை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.