More
Categories: Cinema News latest news

யாஷிகா ஆனந்த் ‘சரக்கு’ பாடலுக்கு வைரமுத்து ட்வீட்!.. முக்கியமான விஷயத்தை சொல்லியிருக்காரு பாருங்க!..

யாஷிகா ஆனந்த் லீடு ரோலில் நடித்துள்ள படிக்காத பக்கங்கள் படத்திற்காக வைரமுத்து எழுதியுள்ள ‘கடை சரக்கு’ பாடல் வரிகளையும் அந்த பாடலையும் தற்போது அவர் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், பிரஜின், ஜார்ஜ் மரியன், லொள்ளு சபா மனோகர், பாலாஜி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் அந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இதில், சினிமா நடிகையாகவே யாஷிகா ஆனந்த் வருகிறார். கையில் துப்பாக்கி எல்லாம் ஏந்திக் கொண்டு அவர் கொலை செய்யும் காட்சிகள் எல்லாம் டீசரில் கொடூரமாக காட்டப்படுகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்!.. கில்லி ரீ ரிலீஸ் முதல் நாள் வசூலை முந்தாத விஷாலின் ரத்னம்!..

போலீஸ் கதாபாத்திரத்தில் ஹீரோவாக பிரஜின் நடித்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ள நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சரக்கு பாடலுக்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து யாஷிகா ஆனந்த் படத்துக்காக எழுதிய சரக்கு பாடல் எதற்காக எழுதப்பட்டது என்பது குறித்த விவரங்களை கவிதையாகவும் மதுவை குடிப்போருக்கு எச்சரிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜய்யை விட நான் சின்ன பொண்ணா?.. வயதை வெளிப்படையாக சொன்ன கில்லி அம்மா!..

”மரணத்திற்கு முன்பே
மனிதனைப் புதைத்துவிடுகிறது
மது

ஒவ்வொரு மணி நேரத்திற்கும்
16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன

44 முதல் 67 விழுக்காடு
சாலை விபத்துகள்
மதுவால் நேர்கின்றன

20மில்லி ரத்தத்தில் கலந்தாலே
பார்வையைப் பாதிக்கிறது மது

30மில்லி கலந்தால்
தசை தன் கட்டுப்பாட்டை
இழந்துவிடுகிறது

ஒருநாட்டின் மனிதவளம்
தவணைமுறையில் சாகிறது

ஒழுக்கக்கோடுகள் அழிந்து
ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில்

மதுவுக்கு எதிராக
நான் எழுதிய ஒருபாடலை
இன்று மாலை வெளியிடுகிறோம்

இப்போதே உங்கள்
கண்களுக்கும் காதுகளுக்கும்” என வைரமுத்து இந்த பதிவில் குறிப்பிட்டு யாஷிகா ஆனந்தின் ‘கடை சரக்கு’ பாடல் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: போன வாரம் ரோமியோ.. இந்த வாரம் ரத்னம்!.. வரிசையாக போட்டு தள்ளும் கில்லி!.. ஐயோ பாவம்!..

 

Published by
Saranya M

Recent Posts