மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிய அயன் படம்... விரைந்து உதவிய வைரமுத்து...

by Akhilan |   ( Updated:2022-10-08 08:17:41  )
மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிய அயன் படம்... விரைந்து உதவிய வைரமுத்து...
X

சூர்யா நடிப்பில் உருவாகி அயன் படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனையை கவிஞர் வைரமுத்து தான் தானே சென்று சரி செய்து வைத்தாராம்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவான படம் அயன். இப்படத்தில் சூர்யாவுடன் தமன்னா நடித்திருந்தார். பிரபு முக்கிய கதாபாத்திரத்திலும், வில்லனாக அகஷ்தீப் சைக்ஹல் நடித்திருந்தார். ஏவிஎம் நிறுவனம் இப்படத்தினை தயாரித்தது. முழுக்க முழுக்க கடத்தல் தொழில் செய்வோரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பெருவாரியான காட்சிகளும் தத்ரூபமாக கடத்தல் தொழில் அதிகம் நடக்கும் இடங்களுக்கே சென்று எடுத்திருந்தார்கள்.

அயன்

இப்படத்திற்கு அயன் எனப் பெயர் வைக்கப்பட்டது. இதுகுறித்த விளம்பரங்களும் வெளியானது. அங்கு தான் துவங்கிய சர்ச்சை, அந்த சமயத்தில் தமிழில் மட்டுமே பெயர் வைக்க வேண்டும். ஆங்கில மொழியில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு கிடைக்காது என்பது விதி. அயன் என்பது ஆங்கில பெயர். இவர்களுக்கு வரி விலக்கு கொடுக்க கூடாது என பலதரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படிங்க: விஜய் – அஜித் கிட்ட இத கேப்பீங்களா.?! பத்திரிகையாளரிடம் கொந்தளித்த சூர்யா.! இதுதான் அந்த சம்பவம்…

ஆனால் இந்த பிரச்சனைக்கு உதவியவர் வைரமுத்து. அவர் தான் அயன் என்பது தமிழ் பெயர். பிரம்ம பகவானை குறிப்பது தான் அயன் எனத் தெரிவித்தார். இதை தொடர்ந்தே இந்த பிரச்சனைகள் ஓய்ந்தது. அயன் படமும் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story