ஜனநாயகன் நஷ்டத்திற்கு முழுப் பொறுப்பு…அடுத்து விஜய் இதைதான் செய்யவேண்டும்… வலைபேச்சு பிஸ்மி கருத்து

Published on: April 12, 2026
valaipechi bishmi
---Advertisement---

கடந்த இரு தினங்களுக்கு முன் விஜய் நடித்த ஜன நாயகன் படம் சமூகவலைதளங்களில் வெளியானது. முதலில் 5 நிமிட காட்சிகள் வெளியான நிலையில் சில நிமிடங்களிலேயே முழு படத்தையும் வெளியிட்டனர். இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகில் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தயாரிப்பு நிறுவனம் புகார் அளித்தனர். இந்த் சம்பவம் தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்த நிலையில் அப்படத்தின் கதாநாயகன் விஜய் வழக்கம்போல வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் வலைபேச்சு பிஸ்மி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ஜனநாயகன் படத்தில் லீக் செய்ததற்கான காரணம் அந்த திரைப்படத்தை மட்டும் அழிக்கும் நோக்கமா? அல்லது விஜயின் அரசியல் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்பது நோக்கமா? என்பது தெரியவில்லை. ஆனால், சிலர் இந்த படத்தை லீக் செய்ததே விஜய் தான் என கூறி வருகிறார்கள். நன்றாக யோசித்துப் பார்த்தால் ஜன நாயகன் படத்தை விஜய் லீக் செய்ய வேண்டிய அவசியம் என்ன?. படம் பெரிய அளவில் வெற்றியடைய வேண்டும். நான் தான் கடைசி படத்திலும் வசூல் சக்கரவர்த்தி என்ற பேரோடு அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் விஜயின் நோக்கமாக இருக்குமே தவிர எதற்காக அவர் திருட்டுத்தனமாக இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் இதுகுறித்து கமல், ரஜினி,சூர்யா, சிவகார்த்திகேயன் உட்பட பெரிய நடிகர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட விஜய் இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார். விஜயின் மௌனமே ஜன நாயகன் படத்தை லீக் செய்ததே விஜய் தான் என பலவிதமான வதந்திகள் பரவிக்கொண்டிருக்க காரணமாக அமைந்துள்ளது. இந்த ஜன நாயகன் லீக் விவகாரத்தால் அப்பட தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்படுவது உறுதி. காரணம் இனி அந்த படம் வந்தாலும் பெரிய ஓபனிங் வருவது கஷ்டம் தான். இந்த நஷ்டத்திற்கு முழு காரணம் விஜய் மட்டுமே. இதே சூர்யாவோ, தனுஷோ அல்லது வேறு நடிகரகள் நடித்திருந்தால் படத்திற்கு இந்த பிரச்சனைகள் வந்திருக்காது. விஜய் படம் என்பதாலயே இது முடக்கப்பட்டது. இதன் காரணமாக ஜன நாயகன் தயாரிப்பாளரான கேவிஎன் புரொடெக்சனுக்கு இலவசமாகவோ அல்லது பாதி சம்பளம் பெற்றுகொண்டோ ஒரு படம் செய்து தரவேண்டும் என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்