உள்ளூர்லயே ஒருத்தனும் கண்டுக்க மாட்டான்! இதுல உலக நாயகனு பட்டம் வேற.. கமலை வறுத்தெடுத்த பிரபலம்

by Rohini |
kamal
X

kamal

Actor Kamal: தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி இப்போது தக் லைஃப் படம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் கமலின் அபரிதமான வளர்ச்சியை காண முடிகிறது. களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக தேசிய விருதை வென்றார் கமல்.

அப்பவே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த போகும் ஒரு நட்சத்திரம் என்று முத்திரை குத்தப்பட்டார் கமல். அதுவும் மெய்யப்பச் செட்டியார் இவர் பின்னாடி ஏதோ ஒளிவட்டம் தெரிகிறது என்றும் வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகராக வருவான் என்றும் செட்டியார் வாயால் புகழப்பட்டவர் கமல். அவர் நினைத்ததை போலவே இன்று கோலிவுட்டில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக வலம் வருகிறார்.

இதையும் படிங்க: 18 நிமிடத்திற்கு முன்பே வந்து காத்திருந்த அஜித்! அதுவரை என்ன செய்தார் தெரியுமா.. வெளியான புகைப்படம்

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் கமலுக்கு பின்னாளில் திருப்பு முனையாக அமைந்த படம் கே. பாலசந்தரின் அரங்கேற்றம் திரைப்படம்தான். இந்தப் படத்தின் மூலம்தான் கமல் ஹீரோவாக அறிமுகமானார். நடிப்பின் நுணுக்கங்களை கமல் முழுவதுமாக கற்றுக் கொண்டது அவ்வை டி.சண்முகத்திடம்தான். அதனாலேயே அவர் அவ்வை சண்முகி என்று பெயர் வைத்து அவ்வை டி. சண்முகம் நினைவாக அந்த படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் கமலுக்கு உலக நாயகன் என்று பட்டம் சூட்டி கவுரவித்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் அதை மிகவும் கேலியாக பேசியுள்ளார். அதாவது கமலை உள்ளூரிலேயே பாதி பேருக்கு அடையாளம் தெரியாது . இதில் வெளி நாட்டிற்கு சென்றால் விமான நிலையத்திலேயே அவரை நிறுத்தி வெகு நேரம் காக்க வைக்கின்றனர். இதில் அவருக்கு உலக நாயகன் என்ற பட்டம் வேற கொடுத்திருக்கிறார்கள்,

anthanan

anthanan

இதையும் படிங்க: புரட்சித்தளபதி தளபதி ஆக வேண்டாமா? ஆசையை தூண்டி விஷாலின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்ட பிரபலம்

உலக நாயகன் என்றால் உலகம் முழுவதும் அவரை பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் சென்னையை தாண்டினாலே கமலை யாரென்றே தெரியாது என வலைப்பேச்சு அந்தனன் கிண்டலாக கூறியிருக்கிறார்.

Next Story