நடிகர் சங்கத்துக்கு ஆரம்பத்தில் கலைஞர் பெயரை வைக்க வேண்டும் என சொன்ன விஷால் இப்போ திடீரென சாமி விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என பல்டி அடித்து பேசுகிறார். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிக்க விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் போராடி வருவது விஷாலுக்குத் தெரியாதா? இப்போ மட்டும் விஜயகாந்த் இறந்த பின்னர் நான் நடிக்க ரெடின்னு சொல்றாரே அத்தனையும் போலி நாடகம் என அந்தணன் புதிய வீடியோவில் பேசி உள்ளார்.
விஜயகாந்த் மற்றும் தேமுதிகவிடம் இல்லாத பணமா அவங்க பசங்களை இத்தனை வருஷமாக சினிமாவில் ஏன் ஆளாக்கவில்லை. சகாப்தம் படத்திலேயே அறிமுகமானவர் தானே விஜயகாந்த் மகன். அப்பாவே ஒரு சில படங்களை ஆரம்பித்து முடிக்காமல் போய் விட்டது. கடைசியாக எடுக்கப்பட்டுள்ள படை தலைவன் படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை.
இதையும் படிங்க: யாரு கர்ப்பமா இருக்காங்கனு தெரியலையே!.. அவர் வேற வயித்த காட்டுறாரு.. அமலா பால் அலப்பறைகள்!..
இந்நிலையில், ராகவா லாரன்ஸ், விஷால் உள்ளிட்டோர் தொடர்ந்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு ஏதோ வாழ்க்கை தருவது போல பேசுவது எல்லாம் அந்த குடும்பத்தை அசிங்கப்படுத்துவது போல ஆகாதா? என அந்தணன் கேட்டுள்ளார்.
விஜயகாந்த் பெயரை எல்லாம் நடிகர் சங்க கட்டடத்துக்கு வைக்கவே மாட்டார்கள். எல்லாமே போலி வாக்குறுதி. விஷால் பேச்சை பல முன்னணி நடிகர்களே மதிக்கவில்லை என்பது நினைவேந்தல் நிகழ்ச்சியை அவர்கள் புறக்கணித்ததில் இருந்தே தெரிகிறது.
இதையும் படிங்க: ராமருக்கு பாட்டுப் போட்ட ராமராஜன் ஜோடி!.. லேடி சூப்பர்ஸ்டாரும் ஒரு பாட்டுப் போடுவாரா?..
திமுக விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தி அத்தனை ஏற்பாடுகளை செய்தது. முதல்வர் ஸ்டாலின் இரு முறை வந்து இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்டார். ஆனால், ஒரு வாரத்திலேயே பிரேமலதா விஜயகாந்த் அரசியல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க என அந்தணன் அடுக்கி உள்ளார்.
