9 பேரை காவு வாங்கிய விபத்து! அப்டேட்ங்கிற பெயரில் இப்படியா பண்றது? அறியாமையில் செய்தாரா அஜித்?
Vidamuyarchi Movie: அப்டேட் அப்டேட் என்று கேட்ட ரசிகர்களுக்கு திடீரென நேற்று வெளியானது விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சி வீடியோ. அந்த வீடியோவை பார்த்த பலரும் அப்டேட் கேட்டதற்கு தண்டனையா ? என்று நொந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் இது குறித்து சில தகவல்களை பகிர்ந்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
அதற்கு இப்படி ஒரு அப்டேட்டா? இதை பார்த்து அஜித் ரசிகர்கள் வேதனைப்பட்டதுதான் மிச்சம். 6 மாதமாக படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். அதில் ஒரு நல்ல காட்சிக் கூடவா இருந்திருக்காது? அதில் ஏதாவது ஒன்றை வெளியிட்டிருக்கலாமே? அதுவும் ஒரு படத்தின் அப்டேட் என்றால் கண்டிப்பாக அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தான் முதலில் வெளியிடும். ஆனால் இந்த வீடியோவை அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா வெளியிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: என்ன கோபி இப்படி பாக்கியாக்கிட்ட மொக்கை வாங்கிட்டீங்களே… இதான் ஓவரா பேசக்கூடாது!…
அஜித்துக்கு தெரியாமலா வெளியிட்டிருப்பார்? இதன் சீரியஸ் உண்மையிலேயே அஜித்துக்கும் தெரிந்ததா இல்லையா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. இது அஜித்தின் அறியாமை என்று கூட எடுத்துக் கொள்ளலாம் என வலைப்பேச்சு அந்தனன் கூறினார். மேலும் என் உயிர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அஜித் சொன்னால் கூட தவறில்லை. ஆனால் எதாவது விபத்து நடந்திருந்தால் அதனால் பாதிக்கப்படுவது அவர் மட்டும் இல்லை.
உடன் இருந்த ஆரவ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தான். ஒரு நாளைக்கு 50 லட்சம் போட்டு படமெடுத்துக் கொண்டிருக்கிறது லைக்கா நிறுவனம். ஏதாவது துரதிர்ஷ்டவசமாக நடந்திருந்தால் அந்த பட நிறுவனத்தின் கதி? அத்தனை ஸ்டண்ட் கலைஞர்களும் உடன் இருந்திருந்தாலும் எதாவது நடந்திருந்தால் நினைத்து பார்க்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதையும் படிங்க: மங்காத்தா ஹிட்டை ட்ரீட் வைத்து கொண்டாடிய விஜய்!.. என்னப்பா சொல்றீங்க!..
இதற்கு உதாரணமாக அந்நியன் பட சம்பவத்தை கூறினார். அதில் ஒரு சண்டை காட்சியில் ஜாக்கிசான் ஸ்டைலில் ஒரு ஃபைட் நடக்கும். ஒருவர் மேல் ஒருவர் ஏறி திடீரென அனைவரும் சறுகி கீழே விழுவார்கள். ஏறுவதற்கு ஒரு கயிறு ஒரு வேனில் கட்டப்பட்டிருந்ததாம். அந்த வேன் எங்கு நிற்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக ஒரு கல்லை தயார்படுத்தியிருந்தார்களாம்.
ஆனால் தவறுதலாக அந்த கல் வேறொரு இடத்தில் வைக்க வேன் அந்த கயிறை இழுத்துக் கொண்டே சென்று விட்டதாம். இதனால் ஸ்பாட்டிலேயே 9 பேர் விபத்தில் சிக்கி இறந்திருக்கிறார்கள். எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் ஆபத்து வரும் சூழ்நிலையில் நான் தான் எல்லாவற்றையும் செய்வேன் என்று அஜித் இப்படி செய்வது சரியா என்று அந்தனன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஆத்தி எல்லாமே குலுங்குதே!.. ஆரஞ்சு புடவையில் அட்டகாசமான ஆட்டம்!.. கிச்சா பொண்டாட்டி செம டான்ஸ்!..