வலிமையை மிஞ்சிய பீஸ்ட்.! ஆனா இது நீங்க நினைப்பது இல்லை.!

நேற்று தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். டாக்டர் படத்தை இவர் இயக்கி இருந்ததால் நிச்சயம் காமெடி நன்றாக இருக்கும். மேலும் விஜய்யுடன் முதன் முறையாக நெல்சன் இணைந்துள்ளார். அதனால் ஆக்ஷன் காட்சிகளுக்கும் குறைவிருக்காது என்று ரசிகர்கள் நம்பியிருந்தனர்.
ஆனால், படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படம் சற்று ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. என்று கூறலாம். படத்தில் மிகப்பெரிய பிளஸ் விஜய் மட்டுமே. மற்றபடி திரைக்கதையும் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை என்பதே உண்மை. ஆதலால் மிகப்பெரிய ஆக்சன் படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இதற்கு முன்னர் பிப்ரவரி மாதம் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கு கூட ஆக்ஷன் காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கிறது என்றும். சென்டிமெண்ட் காட்சிகள் சற்று அதிகமாக இருப்பதால் படம் தொய்வடைந்து விட்டது என்றும் கருத்துக்கள் வெளியானது.
இதையும் படியுங்களேன் - எனக்கு இத விட்டா வேற வழி தெரியல.! சரணடைந்த ராக்கி பாய்.! அடுத்து என்ன.?!
ஆனால், பீஸ்ட் படத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மிகவும் பெரிய ஆக்ஷன் படம் என்று நினைத்த ரசிகர்களுக்கு அது ஆக்ஷன் படமாகவும் இல்லாமல், முழுக்க முழுக்க காமெடி படமாகவும் இல்லாமல் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. ஆதலால் வரும் காலங்களில் கே ஜி எஃப்-2 படத்தை மிஞ்சி பீஸ்ட் திரைப்படம் வலிமை வசூலை கடந்து செல்லுமா என்பது சந்தேகமே என சினிமா விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.