ஆர்ஆர்ஆர் படத்தை முந்துமா வலிமை? அச்சத்தில் விநியோகஸ்தர்கள்….!

Published on: December 28, 2021
RRR movie
---Advertisement---

ஒரு படத்தை எந்த அளவிற்கு விளம்பரம் செய்கிறார்களோ அந்த அளவிற்கு தான் அப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும். படத்திற்கும் நல்ல ரீச் கிடைக்கும். ஆனால் சில டாப் ஹீரோக்களின் படம் என்றால் விளம்பரம் கூட தேவையில்லை. அவர்களின் பெயரே போதும். இருப்பினும் படம் வெளியாகும் முன்பு புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக சில தினங்களே இருப்பதால் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

RRR movie
RRR movie

அந்த வகையில் தமிழ் மொழிக்காக நேற்று சென்னையில் புரோமோஷன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ராஜமெளலி உள்ளிட்ட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர்களுடன் விருந்தினர்களாக உதயநிதியும், சிவகார்த்திகேயனும் பங்கேற்றனர். படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஏற்கனவே ராஜமெளலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்துள்ளதால், தற்போது ஆர்ஆர்ஆர் படமும் அதேபோல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆனால் வலிமை பட விநியோகஸ்தர்கள் கலக்கத்தில் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் நடிப்பில் வலிமை படம் வெளியாவதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் வசூலை அள்ளி விடலாம் என வலிமை பட விநியோகஸ்தர்கள் கனவு உலகில் இருந்தனர்.

ஆனால் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியையும் ரசிகர்கள் மத்தியில் அப்படத்திற்கு நிலவும் எதிர்பார்ப்பையும் பார்த்து கலக்கத்தில் உள்ளார்களாம். என்னதான் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து வலிமை படம் வெளியானாலும் எங்கே வலிமை படத்தின் வசூல் பாதிக்கப்படுமோ என அஞ்சுகிறார்களாம். அவர்களின் பயமும் நியாயம் தான். என்ன நடக்குதுனு பார்க்கலாம்.

Leave a Comment