பயத்தினால் தான் வலிமை வெளியாகவில்லை.... சோசியல் மீடியாவில் ரசிகர்கள் சண்டை....!
அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள படம் தான் வலிமை. ஏனெனில் அஜித் ரசிகர்கள் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தனர். ஆனால் தற்போது நாட்டில் நிலைமை சரியில்லாத காரணத்தால் வலிமை படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.
தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதாலும், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும் வசூல் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனால் சிலர் இந்த காரணத்தை ஏற்க மறுத்து வருகின்றனர்.
ஏனெனில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியானது. அந்த படம் வெளியான சமயத்திலும் தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. ஆனால் படம் நன்றாக இருக்கும் என்பதாலும் விஜய் மீது இருந்த நம்பிக்கையாலும் படத்தை வெளியிட்டனர்.
அதேபோல் படமும் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. விமர்சனமும் ஓரளவிற்கு நல்ல விமர்சனமே கிடைத்தது. ஆனால் தற்போது வலிமை படக்குழுவினர் கூறியுள்ள காரணம் ஏற்கும்படியாக இல்லை. ஒரு நல்ல படம் எந்த சூழ்நிலையில் வெளியானாலும் நன்றாக ஓடும். அதனால் தான் மாஸ்டர் படம் அந்த கடுமையான சூழலிலும் ஓடியது.
ஆனால் வலிமை படக்குழுவினர் பயப்படுகின்றனர். அவர்களுக்கே அவர்களின் படம் மீது நம்பிக்கை இல்லை. அதனால் தான் அவர்கள் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர் என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கூறி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வருகின்றனர். அஜித் விஜய் ரசிகர்கள் சண்டை எப்போதும் நடக்கும் ஒன்று தான். அந்த வகையில் தான் தற்போது இந்த சண்டையும் நடந்து வருகிறது.