பிதாமகனை பட்டி டிக்கெரிங் செய்த பாலா!.. வணங்கான் டீசர் ரிலீஸ்.. அருண் விஜய் நடிப்பு எப்படி?

by சிவா |   ( Updated:2024-02-19 07:31:44  )
vanangaan
X

Vanangaan teaser: தமிழ் சினிமாவில் பாலா ஒரு வித்தியாசமான இயக்குனர் என்பது எல்லோருக்கும் தெரியும். பாலுமகேந்திராவின் சீடரான இவர் சேது திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த சியான் விக்ரமுக்கும் இப்படம் வாழ்வா சாவா கதைதான். இப்படம் வெற்றி பெற்று ரசிகர்களின் விக்ரமை இடம் பிடிக்க வைத்தது.

அதன்பின் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், நாச்சியார் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். பாலா படம் என்றாலே ஹீரோவை அசிங்கமாக மாற்றிவிடுவார்.. அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அந்த படத்தின் ஹீரோவுக்கே சண்டை காட்சியில் நடிக்கும்போது அடிபட்டு கை உடைந்துவிடும்.

இதையும் படிங்க : தினமும் ஒரு செல்பி!. ஆசையாக பிளான் போட்ட விஜய்!.. இப்படி மண் அள்ளி போட்டாங்களே!..

தாரைத் தப்பட்டை படத்தில் நடிக்கும்போது சசிக்குமாருக்கு அப்படித்தான் நடந்தது. இப்போது வணங்கான் படம் உருவானபோது அருண் விஜய்க்கும் இதுதான் நடந்திருக்கிறது. சூர்யா இயக்கத்தில் பாலா இயக்க உருவான படம்தான் வணங்கான். ஆனால், சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா அப்படத்திலிருந்து வெளியேறி தெறித்து ஓடினார்.

அதன்பின் அருண் விஜய் நடிக்க படம் உருவாகி இப்போது டீசர் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அருண்விஜய் காது கேட்காத, வாய் பேச முடியாத வேடத்தில் நடித்திருக்கிறார். டீசரை பார்க்கும்போது அதில் பல காட்சிகள் பிதாமகன் விக்ரமை நினைவு படுத்துகிறது.

vanangan

பிதாமகனில் விக்ரம் எப்படி உருமுவாரோ அதேபோல் உருமுகிறார் அருண் விஜய். இதனால்தான் சூர்யா இப்படத்திலிருந்து விலகினாரா என்பதும் தெரியவில்லை. படத்தை பார்ப்பதற்கு அப்படியே பிதாமகன் 2 போலவே இருக்கிறது. வழக்கமான பாலாவின் துருதுறு கதாநாயகி இந்த படத்திலும் உண்டு.

இந்த டீசரை பார்த்த பலரும் இந்த கருத்துக்களைத்தான் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சிலரோ டீசர் நன்றாக இருக்கிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தில் நடிக்காமல் போனதற்காக சூர்யா வருத்தப்படுவார் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story