Cinema News
‘வானத்தைப் போல’ வெற்றிக்கு கேப்டன் சொன்ன சீக்ரெட் தான் காரணம்!.. இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..
கேப்டன் விஜயகாந்த் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு குதூகாலம் தான். அதுவும் அவரின் படங்களை விரும்பி பார்ப்பதற்கு காரணம் அவருடைய சண்டை காட்சிகளால் மட்டுமே. அந்த காலத்தில் எம்ஜிஆர் படங்களை எப்படி சண்டை காட்சிகளுக்காக ரசிகர்கள் பார்க்க விரும்பினார்களோ அதே போல விஜயகாந்த் படங்களிலும் பேக் டு பேக் ஷார்ட் சண்டை காட்சிகள் இடம் பெற்றதை ரசிகர்கள் மிகவும் விரும்பினார்கள்.
90 களுக்குப் பிறகு விஜயகாந்த் நடித்த பெரும்பாலான படங்கள் குடும்ப கதைகளை மையமாகக் கொண்டே அமைந்தன. குறிப்பாக தவசி, சொக்கத்தங்கம் வானத்தைப்போல, போன்ற படங்கள் எல்லாம் அவரின் 80களில் வந்த படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானவை.
அந்தப் படங்கள் எல்லாம் ஆக்ஷன் படங்களாக இல்லாமல் குடும்ப கதைகளை மையமாக வைத்து எடுத்த படங்களாகும் .இதில் வானத்தைப்போல படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அந்த படத்தின் இயக்குனரான விக்ரமன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
படத்தின் கதையைக் கேட்ட விஜயகாந்த் விக்ரமனிடம் “இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் இதில் சண்டை காட்சிகள் எதுவும் வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினாராம். ஆனால் விக்ரமனோ “உங்கள் ரசிகர்கள் விரும்பி பார்ப்பதே அந்த ஃபைட் சீன் மட்டும் தான். அது இல்லாமல் எப்படி கேப்டன்” என்று கேட்டாராம்.
அதற்கு விஜயகாந்த் “இல்லை பெரும்பாலும் சண்டைக் காட்சிகள் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களுக்கும் இது மிகவும் பிடிக்கும்” என்று சொன்னதின் பெயரில் விக்ரமன் ரசிகர்களுக்காக அந்தப் படத்தில் கடைசி சீன் மட்டும் ஒரு பைட் சீன் வைத்தாராம். விஜயகாந்த் சொன்னபடியே இந்த படம் அந்த அளவுக்கு மக்களை சென்றடைந்தது என்று அந்த பேட்டியில் விக்ரமன் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : உயிர் பயத்தை காட்டிட்டாங்க..விஜயகாந்த் படத்தை ரீமேக் செய்த இயக்குனருக்கு நடந்த விபரீதம்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா?.