“பப்ளிசிட்டிக்காகத்தான் ராபர்ட்… நல்லா ஏமாத்துறான்”… வனிதாவை சீண்டிப்பார்த்த ரசிகர்… இப்படி கொதிச்சிட்டாங்களே!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், தொடக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். எனினும் அவரால் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகியாக ஜொலிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து வனிதா, 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். ஆனால் காலப்போக்கில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
அதன் பின் 2007 ஆம் ஆண்டு வனிதா, ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகளும் உண்டு. எனினும் 2012 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு பீட்டர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வனிதா. இத்திருமணத்தை குறித்து இணையத்தில் சூடான கருத்துக்கள் எழுந்தன. எனினும் திருமணம் ஆன நான்கு மாதங்களில் இருவரும் பிரிந்தனர்.
இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு, நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டருடன் நெருங்கி பழகி வந்தார் வனிதா. இருவரும் இணைந்து “எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல்” என்ற திரைப்படத்தையும் உருவாக்கினார்கள். அதன் பின் ராபர்ட்டிடம் இருந்து பிரிந்தார் வனிதா.
வனிதா, இடைப்பட்ட காலத்தில் ‘பிக் பாஸ் 3” நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து “பிக் பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இதனை தொடர்ந்து தற்போது நடைபெற்றுவரும் “பிக் பாஸ் 6” நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் ஒரு பிரபல யூட்யூப் தொலைக்காட்சியில் பிக் பாஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார் வனிதா.
அப்போது ஒரு ரசிகர் “பிக் பாஸ் விட்டிற்குள் ரக்சிதாவை ராபர்ட் மாஸ்டர் கவர்வதற்காக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஏதோ நடக்கப்போகிறது? இது குறித்து உங்கள் எண்ணம் என்ன?” என கம்மென்ட் பகுதியில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த வனிதா “எனக்கு என்ன வந்தது? அவன் என்ன என்னோட புருஷனா பாய் ஃப்ரண்டா? நானே பப்ளிசிட்டிக்காகத் தான் அவனை பயன்படுத்தினேன்” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “ராபர்ட் 2007 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்தான். அந்த பெண்ணுக்கும் எனக்கும் வாக்குவாதம் என அவன் பேட்டியளித்தான். அந்த பெண் எங்கே இருக்கிறாள் என தெரியவில்லை. அவனுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால் வெளியே சிங்கிள் என தன்னை காட்டிக்கொள்கிறான்” எனவும் கூறினார். வனிதா இவ்வாறு ராபர்ட் மாஸ்டரை குறித்து கூறியது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.