ஹீரோயின் ஆகப்போறாருன்னு வனிதா அக்கா சீன் போட்டாங்க!.. வெளியே போனதும் ஜோவிகா என்ன பண்றாங்க பாருங்க!..
நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் ஃபீல்ட் அவுட் ஆகியிருந்த நிலையில், அவருக்கு கம்பேக் கொடுத்ததே பிக் பாஸ் நிகழ்ச்சி தான். தன்னை போலவே தனது மகளையும் பிரபலமாக்க நினைத்த வனிதா விஜய்குமார் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அவரை கலந்து கொள்ள செய்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜோவிகா விஜயகுமார் ஃப்ரீஸ் டாஸ்க் வரையாவது உள்ளே தூங்கிக் கொண்டு இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அதற்கு முன்னதாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவரை தூக்கி அடித்து விட்டனர்.
இதையும் படிங்க: வரிசையா விஜய் பட ஹீரோயின்களே வளைச்சு போடுறாரே ரன்பீர் கபூர்!.. அடுத்த பாகத்தில் சிக்கியது இவரா?..
பிக் பாஸ் ஜோடிகள் சீசனில் ரம்யா கிருஷ்ணன் உடன் சண்டைப் போட்டு வெளியேறிய வனிதா விஜயகுமார் மீண்டும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது மகளை களமிறக்கி டைட்டிலை வெல்வார் என எதிர்பார்த்த நிலையில், அது நடக்காமல் போனதும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்ப மோசமான நிகழ்ச்சி என ட்வீட் போட ஆரம்பித்து விட்டார். மீண்டும் 2வது பொண்ணை போட்டியாளராக மாற்றும் போது வேறு மாதிரி பேசுவார் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் தனது மகளுக்கு இருப்பதாக சொல்லி வந்தார் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது பார்த்திபனிடம் உதவி இயக்குநராக ஜோவிகா விஜயகுமார் மாறியுள்ள புகைப்படங்களை வனிதா ஷேர் செய்துள்ள நிலையில், அக்கா மேக்கப் போட்டு ஹீரோயினா கேரவன்ல இருப்பாரு ஜோவிகான்னு பார்த்தா இந்த வயசுலயே உழைச்சு முன்னுக்கு வர விட்டுருக்கீங்களே சூப்பர் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹனிமூன் டூர் ஸ்டார்ட்!.. புதுமாப்பிள்ளை ரெடின் கிங்ஸ்லி மனைவியோட செம மஜா பண்றாரே!..