பார்த்தவுடன் குபீர்னு சிரிப்பு வந்தா கம்பெனி பொறுப்பல்ல!.. வனிதா விஜயகுமாரின் போலீஸ் அவதாரம்!..

Published on: October 7, 2023
---Advertisement---

வனிதா விஜயகுமாரை தாண்டி வனிதா விஜயகுமாரின் மகளைப் பற்றி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அப்படி ஒரு வத்தி குச்சியை வனிதா மகள் ஜோவிகா பற்ற வைத்துள்ளார்.

ஒரு பக்கம் தனது மகள் பேசிய கருத்துக்கு முட்டு கொடுத்து வரும் வனிதா விஜயகுமார் இன்னொரு பக்கம் இப்படி ஒரு போஸ்டரை வெளியிட்டு படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: மிடில் க்ளாஸ் மாதவனாக வாழ்க்கையை ஆரம்பித்த சந்தானம்! தற்போதுள்ள சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மனோஜ் கார்த்திக் காமராஜ் இயக்கத்தில் வனிதா விஜயகுமார் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் வைஜெயந்தி ஐபிஎஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் காக்கி சட்டை அணிந்து கொண்டு கையில் துப்பாக்கியுடன் மரண மாசாக போஸ் கொடுத்துள்ளார் விஜயகுமார்.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஐபிஎஸ் படித்தால் தானே இப்படி எல்லாம் உயர் அதிகாரியாக ஆக முடியும் என நெட்டிசன்கள் ஒரு பக்கம் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆபத்து எப்படியும் வரலாம்! அரசியல் பற்றி விஜய் அளித்த பேட்டி!.. அப்பவே அஸ்திவாரம் போட்ட தளபதி..

பள்ளியில் படிக்கவில்லை என்றால் கூட சினிமாவில் மேக்கப் போட்டு டாக்டராகவோ, ஐபிஎஸ் அதிகாரியாகவோ வனிதாவை போல அவரது மகள் ஜோவிகாவும் ஆகிவிடுவார் பாஸ் என ரசிகர்கள் பதில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

விசித்ரா ஜோவிகா சண்டை தொடர்பாக பெரும் விவாதமே நடைபெற்று வரும் நிலையில், போட்டிக்கு நடுவே இந்த கெளஷிக் நானும் வருகிறேன் என வனிதா விஜயகுமார் என்ன காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார் என நெட்டிசன்கள் வித விதமான கமெண்ட்டுகளை போட்டு கேலி செய்து வருகின்றனர்.

தொடர்ந்து தனது விடாமுயற்சியால் பல படங்களில் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார் என்றும் அவரது முயற்சியை பாராட்டலாமே ஃபிரெண்ட்ஸ் என்றும் வனிதாவின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.