Connect with us
vijay

Cinema News

ஆபத்து எப்படியும் வரலாம்! அரசியல் பற்றி விஜய் அளித்த பேட்டி!.. அப்பவே அஸ்திவாரம் போட்ட தளபதி..

Vijay Politics: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்து நிற்கிறார். விஜயின் ஒவ்வொரு படங்களின் ரிலீஸும் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாப் போலத்தான் காட்சியளிக்கின்றன. அதுவரைக்கும் அந்த கூட்டம் எங்கு இருக்கும் என்றே தெரியாது. விஜயின் படம் ரிலீஸ் என்றால் ஒட்டுமொத்த தமிழ் நாட்டையும் திரையரங்குகளில் பார்க்கலாம்.

அந்தளவுக்கு மாபெரும் ரசிகர் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கிறார் விஜய். இந்த நிலையில் சினிமாவில் எனக்காக கூடிய கூட்டம் அரசியலிலும் கூடுவார்கள் என்ற  நம்பிக்கையில் அரசியலில் இறங்கவும் முயற்சித்து வருகிறார் விஜய்.

இதையும் படிங்க: விஜய்க்கு முன்னாடி தலீவர் ஜுஜுபி!.. தென்னை மரத்துல ஒரு குத்து.. பனை மரத்துல ஒரு குத்து!.. ப்ளூ சட்டை பலே!..

அது சம்பந்தமாக விஜய் ஒரு சமயம் அரசியல் வருகை குறித்து பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் விஜய் கூறியதாவது:   ‘நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் நினைத்ததை விட மக்கள் ஒரு பெரிய இடத்தை எனக்கு கொடுத்துவிட்டார்கள். அதே போல் இன்னொரு இடத்திலும் என்னை உட்கார வைக்க மக்கள் இடம் கொடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

யார் பேச்சையும் கேட்டு நான் எதிலும் உடனடியாக இறங்க மாட்டேன். ஆனால் அரசியலில் இறங்குவதற்கான அஸ்திவாரத்தை பலமாகப் போட்டுக் கொண்டு வருகிறேன். யாருக்கு எப்பொழுது எப்படி வெற்றி தோல்வியை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவன் ஆண்டவன்.

இதையும் படிங்க: லியோல விஜய் டூப் போடாம நடிச்சி மிரட்டியிருக்காரு!.. அந்த ஹைனா யாருன்னா.. லியோ வில்லன் சொன்ன செம விஷயம்!..

சாதாரண மாமிச உடலைக் கொண்ட எந்த மனிதராலும் இதை தடுக்கவே முடியாது. இதை நான் சொல்லிட்டேன். ஆனால் பல பேர் சொல்லமுடியாமல் இருக்கின்றனர்.  சம்பந்தப்பட்டவர்கள் இந்தப் பேட்டியை படித்துவிட்டு என் வீட்டில் கல்லை எறியலாம். உடைக்கலாம். ஆபத்து எந்த ரூபத்திலயும் வரலாம்.

ஆனால் அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவே இல்லை’. அரசியல் வருகையை பற்றி இப்படியொரு கருத்தை அதிரடியாக விஜய் பேசியது இதுவரை எந்த பத்திரிக்கைகளிலும் வெளிவரவில்லை. ஏனெனில் இந்த பேட்டியை விஜய் சொன்னது 2011 ஆம் ஆண்டில்.

இதையும் படிங்க: லியோல விஜய் டூப் போடாம நடிச்சி மிரட்டியிருக்காரு!.. அந்த ஹைனா யாருன்னா.. லியோ வில்லன் சொன்ன செம விஷயம்!..

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு  முன்பே தனது அரசியல் வருகையை பதிவு செய்திருக்கிறார் விஜய். ஆபத்தை பற்றி பேசிய விஜயின் கருத்து ஒரு வேளை தன் குடும்பத்தை லண்டனில் செட்டிலாக வைத்தது இதனால் கூட இருக்கலாம் என யோசிக்க வைக்கிறது. ஆனால் எப்படியும் ஒரு வலிமையான அரசியலை விஜய் செய்யப் போகிறார் என தெரிகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top