முதன் முறையாக விஜயகுமார் பேரை காப்பாற்றிய வனிதா! ஒன்னு சேர்ந்துருவாங்களோ!..

vanith
Vanitha Vijayakumar: கோலிவுட்டில் விஜயகுமார் குடும்பத்திற்கு என்று ஒரு தனி மரியாதையே இருக்கிறது. விஜயகுமார் குடும்பத்திலிருந்து எட்டு பேர் நடிகர்களாக இருந்திருக்கின்றனர். அதில் அவருடைய பேரனும் அருண் விஜயின் மகனும் குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இப்படி அன்றிலிருந்து இன்று வரை தனக்கென ஒரு தனி மரியாதை உடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் விஜயகுமார்.
விஜயகுமார் மஞ்சுளாவிற்கு பிறந்த மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் ஆரம்பத்தில் இருந்தே விஜயக்குமார் குடும்பத்துடன் பிரச்சனையில் இருந்து வந்தார். அதனாலயே அவர் இன்று வரை தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வனிதாவுக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் மேலும் பிரபலமானார்.
இதையும் படிங்க: அஜித்கிட்ட இருந்த அந்த ஒரு விஷயம்! ‘பில்லா’ல அதான் ஒர்க் அவுட் ஆச்சு.. இப்படி வேற இருக்கா?
அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவை தேடி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். அதில் வெங்கட் இயக்கத்தில் தண்டுபாளையம் என்ற படத்திலன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்தப் படத்தில் வனிதா உடன் சேர்ந்து சோனியா அகர்வாலும் நடித்திருக்கிறார்.
இரு ஹீரோயின்கள் சப்ஜெக்ட் சம்பந்தப்பட்ட கதை. இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் வனிதா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டரை பார்த்து மிகப்பெரிய பிரபல இயக்குனர்கள் ஆறு பேர் வனிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்தினார்களாம். அது மட்டும் இல்லாமல் அந்த காலத்தில் ராதிகாவை பார்த்த மாதிரி இந்த படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.
இதையும் படிங்க: பக்கா கேடியான ரோகிணி… அடே எங்களுக்கே காண்டாகுது.. வில்லிக்கு இவ்வளோ சீனா?
அடுத்த ராதிகாவாகவே நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் என்று கூறியதாகவும் வனிதா அந்த விழாவில் கூறினார். அது மட்டும் இல்லாமல் விஜயகுமார் சரத்குமார் இருவரும் நடித்த பல படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. அப்படி இந்த படத்தில் விஜய குமாரையும் சரத்குமாரையும் பார்த்த மாதிரி ஒரு ஃபீல் இருந்தது என்றும் அந்த இயக்குனர்கள் கூறியதாக வனிதா தெரிவித்தார். அவர்கள் இப்படி கூறியது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஏனெனில் என் அப்பா படங்களின் வரிசையில் என்னுடைய இந்த படத்தையும் அந்த இயக்குனர்கள் கூறியது மிகப்பெரிய சந்தோஷத்தை எனக்கு ஏற்படுத்தியது என வனிதா கூறினார்