நான் ஒரு திறந்த புத்தகம்!.. மூஞ்சில குத்து வாங்கினதும் வனிதா விஜயகுமாருக்கு வந்த ஞானோதயம்?..
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரும் ஆன வனிதா விஜயகுமார் எனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவை ஏகப்பட்ட ரசிகர்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகர் விஜயுடன் சந்திரலேகா படத்தில் நடித்த வனிதா விஜயகுமார், பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவுக்கு பிறந்தவர். ஆனால், வனிதா விஜயகுமார் தனது திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த நிலையில் அவரது அப்பா விஜயகுமாரே அவரை ஒதுக்கி வைத்துவிட்டார். அருண்விஜய், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் என குடும்பத்தினர் அனைவரும் வனிதா விஜயகுமாரை விட்டு விலகியே உள்ளனர்.
இதையும் படிங்க: ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் கேப்டனுக்கு பதில் நடிக்க இருந்த நடிகர்! அலைய வச்சு டிமிக்கி கொடுத்ததுதான் மிச்சம்
கடைசியா பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் அவருக்கு உடல்நலம் சரியில்லை என்றதும் அவரை விட்டுப் பிரிந்து விட்டார் இங்கே குற்றச்சாட்டுகளும் கிளம்பின. இந்நிலையில் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனது மகள் ஜோவிகாவை அனுப்பியிருந்தார். அவருக்காக ஏகப்பட்ட சப்போர்ட் களை வெளியே இருந்து தொடர்ந்து செய்து வருகிறார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்தன.
சமீபத்தில், பிரதீப் ஆண்டனியின் ரசிகர் ஒருவர் தன்னை தாக்கி விட்டதாக முகத்தில் ஏற்பட்ட காயத்துடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வனிதாவின் மகள் ஜோவிகா தான் வெளியேற போகிறார் என தகவல்கள் கசிந்து வரும் நிலையில், வனிதா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: ஆன்மீகம்னா என்ன தெரியுமா? எவ்ளோ டக்கரா சொல்லிருக்காரு…. சமுத்திரக்கனி சொல்றதைக் கேளுங்கப்பா…
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ” நான் ஒரு திறந்த புத்தகம்.. உலகத்திலேயே என்னைப் போன்ற நேர்மையான ஒருவர் இது கிடையாது.. அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்” என புரியாத புதிர் போல போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அந்த போஸ்டை கலாய்த்து ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms