Connect with us
cap

Cinema News

‘செந்தூரப்பாண்டி’ படத்தில் கேப்டனுக்கு பதில் நடிக்க இருந்த நடிகர்! அலைய வச்சு டிமிக்கி கொடுத்ததுதான் மிச்சம்

Senthoorapandi Movie:  நடிகர் விஜயின் கெரியரில் மிகவும் திருப்பு முனையாக அமைந்த படம் செந்தூரப்பாண்டி திரைப்படம். இந்தப் படத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதுவும் விஜய்க்காக அவர் நடித்துக் கொடுத்த படம்தான் இது.

விஜயகாந்துக்கு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த எஸ்.ஏ.சிக்காக சம்பளம் வாங்கமாலேயே இந்த படத்தில் விஜயகாந்த் நடித்ததாக சொல்லப்படுகிறது. இதை பற்றி ஒரு தெரியாத விஷயத்தை பிரபல இயக்குனர் பாரதி கண்ணன் ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: நானும் எவ்ளோ நாள்தான் காத்திருக்கிறது? ‘தனி ஒருவன் 2’ வால் அண்ணனுக்கு நேர்ந்த கதி

அதாவது செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்திற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் சத்யராஜ்தானாம். ஆனால் விஜயகாந்த் அளவுக்கு சத்யராஜ் அந்தளவுக்கு உதவி செய்யும் எண்ணம் இல்லாதவர் என பாரதி கண்ணன் கூறியிருந்தார்.

படப்பிடிப்பில் இருந்த சத்யராஜை பல முறை அணுகிய போதும் பார்க்கலாம், அப்புறம் பார்ப்போம் என்று சொல்லியே நாள்களை கழித்துவிட்டாராம். அதன் பிறகு எஸ்.ஏ.சியும் ஷோபாவும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஷோபாதான்  நம்ம விஜியை கேட்டால் என்ன என்று ஐடியா கொடுத்தாராம்.

அதற்கு எஸ்.ஏ.சி தன்னை வளர்த்தவரே உதவி கேட்கிறாரே என விஜி நினைத்துக் கொண்டால் என்ன பண்ணுவது ? என கேட்டிருக்கிறார். அதற்கு ஷோபா அப்படி எல்லாம் இல்லை. விஜியிடம் கேளுங்கள் என சொல்ல உடனே போன் செய்தாராம் எஸ்.ஏ.சி.

இதையும் படிங்க: வெற்றிமாறனுடன் இணையும் அஜித்?.. இவ்ளோ ஷாக் கொடுத்த தாங்கமாட்டாங்க ஃபேன்ஸ்!…

போனை எடுத்ததும் விஜயகாந்த் சொல்லுங்கள் சார் என அவருடைய பாணியில் பேசியிருக்கிறார். முழு விவரத்தையும் எஸ்.ஏ.சி சொல்ல என்ன கதை , சம்பளம் , கால்ஷீட் எதை பற்றியும் கேட்காமல் உடனே ஓகே சொல்லியிருக்கிறார். எஸ்.ஏ.சி ‘இரு விஜி நான் வீட்டிற்கு வருகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு விஜயகாந்த் ‘என்ன எஸ்.ஏ.சி என்னை பார்க்க வருவதா? நானே வருகிறேன். போனை வையுங்கள்’ என்று சொல்லி அடுத்த கணமே எஸ்.ஏ.சி வீட்டிற்கு பறந்து விட்டாராம் விஜயகாந்த். இப்படி நடந்த படம்தான் செந்தூரபாண்டி திரைப்படம் என இயக்குனர் பாரதிகண்ணன் கூறினார்.

இதையும் படிங்க: இத்தனை குறள் படித்தவருக்கு இந்த குரல் கேக்கலயா? மான நஷ்ட வழக்கு போடப் போகும் அமீர்

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நேற்று அறிமுகமான லலித்  மகன் இல்லத்திருமண விழாவிற்கு செல்ல  தெரிந்த விஜய்க்கு தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவரின் உடல் நிலையை விசாரிக்க தெரியவில்லை என்று விமர்சித்து வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top