More
Categories: Cinema News latest news

விஜயகுமார் குடும்பம் செல்லாத ரூட்.. வாய்ப்புக்காக மோசமாக மகளை இறக்கிய வனிதா… கலாய்க்கும் ரசிகர்கள்

Vanitha vijayakumar: நடிகை வனிதா விஜயகுமார் எப்போதுமே அடாவடியாக சிலவற்றை செய்துவிடுவார். அந்தவகையில் அவர் சமீபத்தில் செய்து இருக்கும் விஷயம் ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது. மகளின் எதிர்காலத்துக்காக இப்படியா இறங்குவாங்க என பலரும் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.

பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் மூத்தமகளாக பிறந்தவர் வனிதா விஜயகுமார். இவரும் நடிகையாக சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தார். அறிமுகமே விஜயின் சந்திரலேகா படத்தில் தான். நல்ல ரீச் கொடுத்தாலும் அதன் பின்னர் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து சில படங்களில் நடித்தவருக்கு சொந்த வாழ்க்கையில் பிரச்னை அதிகமாகியது. 

இதையும் படிங்க: உங்கள தேடிட்டு இருந்தோம்! ரசிகர் சொன்னதுக்கு சரியான தக் லைஃப் கொடுத்த அஜித்.. குசும்பு புடிச்ச தல

தொடர் விவகாரத்து, அப்பா, அம்மாவுடன் சண்டை என பிரச்னை வீதிக்கு வந்தது. அப்போது கூட வனிதாவுக்கு சப்போர்ட் அதிகம் இருந்தது. ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுமே அக்காவுக்கு வாய் அதிகம் எனப் பலரும் கலாய்க்க தொடங்கினர். 

ஒரு பக்கம் சின்ன சின்ன வேடத்தில் நடித்து வந்தவர். இந்த சீசனில் தன் மூத்த மகள் ஜோவிகாவை களம் இறக்கினார். பைனலிஸ்ட்டாக எதிர்பார்க்கப்பட்டவர் ஒரு சில நாட்களில் புல்லி கேங்கில் இணைந்தார். அடிக்கடி தூங்கி, கீழே விழுந்து என கலாய் மெட்டிரியல் ஆனார்.

இதில் அக்கா வேறு ரிவியூ என்ற பெயரில் தன் மகளை அடுத்த திரிஷா, நயன்தாரா என புகழ்ந்து கொண்டு இருந்தார். இந்த சர்ச்சைக்கு இடையில் பைனல் கூட செல்லாமல் வெளியேற்றப்பட்டார். அதுக்கும் அக்கா செய்த சேட்டை எக்கசக்கம். வெளிவந்த ஜோவிகா பார்த்திபன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற தொடங்கியதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: இப்படி மாறிட்டாரே மனுஷன்!.. பைக் ஸ்பீடுக்கு மாறிய அஜித்!.. AK63 A to Z எல்லாம் பிளான் போட்டாச்சே!..

ஜோவிகா போட்டோஷூட்டை பார்க்க: https://www.instagram.com/p/C27rqOdvL_W/
Published by
Akhilan

Recent Posts