சிறப்பாக முடிந்த விஜயகுமார் வீட்டு திருமணம்! சூசகமாக வனிதா போட்ட அந்த பதிவு.. அக்கா எப்பவுமே வேற ரகம்தான்

by Rohini |
vanith
X

vanith

Actor Vijayakumar: கோலாகலமாக நடந்து முடிந்தது விஜயகுமாரின் பேத்தி திருமணம். விஜயகுமாரின் மகளான அனிதாவின் மகள் தியாவின் திருமணம் நேற்று மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே தடபுடலான வேலைகள் அரங்கேறி வந்தன.

சங்கீத் விழா, மெகந்தி விழா என நாள் தோறும் மிகவும் சந்தோஷமாக விஜயகுமார் குடும்பம் கொண்டாடியது. ஒரு பக்கம் விஜயகுமாரின் மகள்களான அனிதா, ஸ்ரீதேவி, ப்ரீத்தா, கவிதா என அனைவரின் மேக்கப் அனைவரையும் ஈர்த்தது. அது சம்பந்தமான பல புகைப்படங்கள் வீடியோக்கள் என இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க: எம்.எஸ்.வி மீது கோபப்பட்டு மரத்தடியில் போய் நின்ற இயக்குனர்!.. உருவானதோ ஒரு சூப்பர் பாட்டு!..

விஜயகுமார் வீட்டில் அத்தனை பேருமே நடிகர்கள்தான். அனிதா சரத்குமார் நடித்த கூலி திரைப்படத்தில் சரத்குமாருக்கு தங்கையாக நடித்திருப்பார். இந்தப் பக்கம் ஸ்ரீதேவி, ப்ரீத்தா இருவருமே முன்னணி நடிகர்களாக திகழ்ந்தவர்கள். இந்த நிலையில் விஜயகுமாருக்கு மஞ்சுளாவுக்கு பிறந்த இன்னொரு மகள் வனிதா விஜயகுமார் என அனைவருக்கும் தெரியும்.

குடும்ப பிரச்சினை காரணமாக வனிதா தன் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக தன் குழந்தைகளை கவனித்து வருகிறார். தனி ஆளாக தன் இரு மகள்களுக்கும் சரி அரணாக இருந்து மிகவும் பாதுகாத்து வருகிறார்.

இதையும் படிங்க: சிம்பு படத்தில் அந்த பாடல் ஹிட் ஆனதுக்கு காரணம் இவர்தான்! காதலர்கள் கொண்டாடும் பாடல்

இந்த நிலையில் வனிதாவின் ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜயகுமார் பேத்தி திருமணத்திற்கு வனிதாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட வில்லை. அனைவரும் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடி நிலையில் வனிதா தன் இணையதள பக்கத்தில் ‘சிங்கம் நடந்து வரும் ஒரு புகைப்படத்தை போட்டு ஒட்டுமொத்த கூட்டமும் ஒன்றாக இருக்கும் போது நீங்கள் மட்டும் தனியாக இருப்பது நீங்கள் எவ்வளவு பலம் வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என பதிவிட்டிருக்கிறார்.

Next Story