வந்தநாள் முதல் பாடல் உருவானது எப்படின்னு தெரியுமா? அடடே இதுல இவ்ளோ சுவாரசியமா?!

by sankaran v |   ( Updated:2025-04-27 08:39:50  )
msv
X

msv

கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு எம்எஸ்வி. போட்ட மெட்டு. டிஎம்எஸ் குரல் கொடுக்க பாடல் எல்லோரையும் இன்று வரை முணுமுணுக்க வைக்கிறது. இந்தப் பாடல் பிறந்தது எப்படின்னு பார்க்கலாமா…

டி.கே.ராமமூர்த்தி அண்ணனும், நானும் காலை நேரத்தில் உட்கார்ந்து பாவமன்னிப்பு பாடலுக்கு மெட்டு அமைத்தோம். அண்ணன் தபேலாவில் தாளம் போட, நான் ஆர்மோனியத்தில் மெட்டு போட்டு பார்த்தேன். ஒன்றும் பிடிபடவில்லை என்கிறார் எம்எஸ்வி. அப்புறம் அவர் அந்தப் பாடலைப் பற்றி இப்படி சொல்கிறார்.

'வந்த நாள் முதல்' என்று துவங்குகிறது வரிகள். அதையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது அவருக்கு கடந்த கால நினைவுகள் வந்ததாகவும் சொல்கிறார். சாந்தோம் கடற்கரையில் மீனவர்கள் ஒரு பாடலைப் பாடுகிறார்கள். அந்த ராகம் மனதில் ஆழப் பதிந்து விடுகிறது. அந்தப் பாடல் ரொம்பவே அவரை வசியப்படுத்தி விடுகிறது.

அதன்பிறகு அந்தப் பாடலை மனப்பாடம் செய்தபடி வீட்டில் வந்து படுத்து விட்டாராம் எம்எஸ்வி. சில நாள்கள் கழித்து ஒரு சினிமா தியேட்டருக்குச் சென்றுள்ளார். அங்கு ஆங்கிலத்தில் அதே மீனவர் பாடல் ஒலித்துள்ளது.

அதன்பிறகு என்ன செய்யலாம் என்று நினைத்த அவருக்கு வந்த நாள் முதல் பாடல் நினைவுக்கு வந்து அதற்கு அதே மீனவர் பாடலுக்கான மெட்டைப் போட்டுள்ளார். அப்படி பிறந்ததுதான் அந்த வந்த நாள் முதல் பாடல். உற்சாகமாக பிறந்தது அங்கிருந்துதான் என்று சிலாகித்த படி சொல்கிறார் எம்எஸ்.விஸ்வநாதன்.

1961ல் ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, தேவிகா உள்பட பலர் நடித்த சூப்பர்ஹிட் படம் பாவமன்னிப்பு. விஸ்வநாதன் ராம மூர்த்தியின் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. அத்தான் என்னத்தான், எல்லோரும் கொண்டாடுவோம், காலங்களில் அவள் வசந்தம், பாலிருக்கும் பழமிருக்கும், சாய வீதி, சிலர் அழுவார் சிலர் சிரிப்பார், வந்த நாள் முதல் ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

Next Story