கல்யாணமே இன்னும் ஆகல!.. அதுக்குள்ள ஆயில் மசாஜா!.. வரலக்‌ஷ்மி சரத்குமார் ரொம்ப விவரம் தான்!..

Published on: April 10, 2024
---Advertisement---

நடிகர் சரத்குமாருக்கும் அவரது முன்னாள் மனைவி சாயாதேவிக்கும் மகளாகப் பிறந்த வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் சிம்பு நடித்து வெளியான போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அந்தப் படத்தை தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தார். பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் ரெக்கார்டு டான்ஸ் நடனமாடும் கலைஞர் ஆகவே மாறி குட்டை பாவாடை அணிந்து கொண்டு அவர் போட்ட நடனத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர்.

இதையும் படிங்க: இப்படித்தான் அந்த பாட்டுக்கு மியூசிக் போட்டாரா இளையராஜா?!.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..

விக்ரம் வேதா, மிஸ்டர் சந்திரமௌலி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த வரலட்சுமி சரத்குமார் சண்டக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் திடீரென வில்லியாக மாறி மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தினார்.

மாரி 2, நீயா 2 இன வரிசையாக பார்ட் 2 படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பு கிடைக்காத நிலையில் தெலுங்கில் வில்லியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்த வரலட்சுமி சரத்குமார் வீர சிம்மா ரெட்டி, ஹனுமான்உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: கமலுக்கு பதில் என்னை அந்த படத்துல ஹீரோவா புக் பண்ண பாலசந்தர்!.. நிழல்கள் ரவி சொன்ன சீக்ரெட்!..

மீண்டும் தனுஷ் உடன் ராயன் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், கடந்த மாதம் அவருக்கும் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடிந்த கையுடன் வருங்கால கணவருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். திருமணத்துக்கு முன்னதாகவே ஹனிமூன் போயிட்டீங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களை மீண்டும் வெறுப்பேற்றும் விதமாக தனது வருங்கால கணவருக்கு ஆயில் மசாஜ் அசையும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு விவாதத்தை கிளப்பியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

இதையும் படிங்க: விஜய்க்கு வாழ்க்கை கொடுத்து காணாம போயிட்டாரு! இயக்குனர் விக்ரமனின் வெற்றியும் தோல்விகளும்!..

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.