ரஜினி, கமல், கார்த்திக், பிரபு வாரிசுகள் ஜெயிக்கலயே.. அட இதுதான் காரணமா?

by sankaran v |   ( Updated:2025-04-01 21:14:06  )
varisu actors
X

varisu actors

இன்று தமிழ்த்திரை உலகம் இளம் தலைமுறைகளால் வேகமாக வளர்ந்துள்ளது. குறும்படத்தை இயக்கியவர்கள் பெரிய இயக்குனர்களாகி விட்டார்கள். கார்த்திக் சுப்புராஜ், நித்திலன் சுவாமிநாதன் ஆகியோரைச் சொல்லலாம். அதே நேரம் டிராகன் படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதன் இளம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து வருகிறார்.

இவர்களுக்கு எல்லாம் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லை. சிவகார்த்திகேயன், அஜீத் போன்ற நடிகர்களையும் சொல்லலாம். ஆனால் வாரிசு நடிகர்களான கௌதம் கார்த்திக், விக்ரம்பிரபு, அதர்வா, சாந்தனு, சுருதிஹாசன், அக'ஷரா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த், துருவ், சண்முகப்பாண்டியன் உள்பட பலர் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. சமீபத்தில் மறைந்த பாரதிராஜாவின் தவப்புதல்வன் நடிகர் மனோஜ் கூட தன்னால் இன்னும் சினிமாவில் முன்னுக்கு வரமுடியவில்லையே என வருத்தப்பட்டாராம்.

அந்தவகையில் வாரிசு நடிகர்களின் தோல்விக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கான விடையை இங்கு பார்ப்போம். தெலுங்கு, மலையாளம், இந்திப்பட உலகில் முன்னாள் நடிகர்களின் வாரிசுகள் கொடிகட்டிப் பறக்கிறது.

varisu actors2ஆனால் தமிழ் நடிகர்களான ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், விஜயகாந்த் இவர்களின் வாரிசுகள் வெற்றி பெறாமல் இருக்க என்ன காரணம் என ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் வாரிசுதான் பிரபு. அதேபோல நடிகர் முத்துராமனின் வாரிசு தான் நவரச திலகம் கார்த்திக். இவர்கள் தமிழ்சினிமாவில் ஜெயிக்கலையா? திரையுலகைப் பொருத்தவரை எல்லா வாரிசு நடிகர்களும் தமிழ்சினிமாவில் ஜெயிக்கணும்னு எதிர்பார்க்குறதே சரியில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

அந்தந்த நடிகர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள்தான் அவர்களுடைய பயணத்தை உறுதிசெய்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தரின் மகன் சிம்பு மட்டும் இன்னும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story