துணிவை விட வாரிசுக்கு அதிக வசூல்!... விஜய் போடும் கணக்கு...இது சரியா வருமா?...
திரைத்துறையில் போட்டி எப்போதும் நிரந்தரமான ஒன்று. எம்.ஜி.ஆர் - சிவாஜி துவங்கி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என இப்போதும் இந்த போட்டி தொடர்ந்து வருகிறது.
ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்கள் வெளியாகி போட்டி போடும். அதேபோல், ரஜினி - கமல் படங்கள் வெளியாகி, இரண்டும் வெற்றி பெறும். அல்லது ஒரு படம் குறைவான வசூலை பெறும். அஜித், விஜய்க்கும் இது நடந்திருக்கிறது. பல முறை அஜித் மற்றும் விஜயின் படங்கள் ஒன்றாக வெளியாகும். இதில் பெரும்பாலும் விஜயின் படங்கள் அதிக வசூலை பெறுவதுண்டு. சில சமயம் அஜித் படங்கள் ஹிட் அடித்துவிடும்.
ஒருகட்டத்தில், விஜய் படங்கள் வெளியாகும் போது தன்னுடய படங்களை வெளியிடுவதை அஜித் நிறுத்திக்கொண்டார். ஒருபுறம், வினியோகஸ்தர்களும் அதைத்தான் விரும்பினார்கள். இருவரின் படங்களும் தனித்தனியாக வந்தால் இரண்டு படத்திற்கும் வசூலை அள்ளலாம் என்பது அவர்கள் கணக்கு. அஜித்தும் இதை புரிந்துகொண்டார்.
ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை இந்த முறை வாரிசு படத்துடன் தன்னுடைய துணிவு படம் மோத வேண்டும் என்பதில் அஜித் உறுதியாக இருந்தார். எனவே, இருவரின் படங்களும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதில், தியேட்டர் அதிபர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் விருப்பம் இல்லை என்றாலும் அஜித் உறுதியாக இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அஜித்தின் துணிவு ஜனவரி 11ம் தேதியும், விஜயின் வாரிசு திரைப்படம் ஜனவரி 12ம் தேதியும் வெளியாகும் என கணிக்கப்படுகிறது. இதில், வாரிசு படத்தை வசூலை அதிகரிப்பதற்காக முதல் 3 சிறப்பு காட்சிகளுக்கும் டிக்கெட்டின் விலை ரூ.500 என முடிவு செய்துள்ளார்களாம். இதன் மூலம் வாரிசு படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கு போடுகிறார்களாம். ஒருபக்கம் துணிவு படத்திற்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
எப்படியும் இந்த பொங்கல் அஜித், விஜய் ரசிகர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்களுக்கு பரபர பொங்கலாகத்தான் அமையப்போகிறது.
இதையும் படிங்க: பாபா படத்தின் ரி-ரிலீஸிலும் சொதப்பல்கள்… 7 வேண்டாம் 5 போதுமாம்.. மாற்றப்பட்ட புது கிளைமேக்ஸ் என்ன?