ப்ளாஷ்பேக்: வசந்தமாளிகை படத்தில் மிஸ்ஸான சூப்பர்ஹிட் பாடல்…. அட இதுக்குப் பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா?

by sankaran v |   ( Updated:2025-04-16 05:05:08  )
vasanthamaligai
X

vasanthamaligai

வசந்தமாளிகை படத்தில் 'அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன' என்ற பாடல் செம ஹிட். ஆனால் படத்தில் அந்தப் பாடல் இடம்பெறவில்லை. ஏன்னு பார்க்கலாமா…

2019ல் 47 ஆண்டுகள் கழித்து சிவாஜி நடித்த வசந்தமாளிகை படம் வெற்றிகரமாக ஓடியது. காதல் கதைகளில் இப்படி ஒரு கதை வந்தது இல்லை. இனி வரப்போவதும் இல்லை. அழகாபுரி ஜமீனாக பல ஆண்களும் இல்லாவிட்டாலும் வாணிஸ்ரீ போன்ற தேவதை வந்து தன் வாழ்க்கையை மாற்ற மாட்டாளா என்றுதான் பலரும் ஏங்குகின்றனர்.

அந்த அளவில் ஆண்களுக்குப் பிடித்த படம் ஆகிவிட்டது. அதே போல வறுமையில் இருந்தாலும் வைராக்கியத்தோடு வாழ வேண்டும் என்று பெண்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் வாணிஸ்ரீ. அதனால் பெண்களும் படத்தைக் கொண்டாடுகிறார்கள். 1972ல் படம் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு ஜவுளிக்கடைகளில் பெயர் மாறியது.

வாணிஸ்ரீ தான் அங்கு விளம்பரப் படமாக அலங்கரித்தார். கேவி மகாதேவன் இசையில் டிஎம்எஸ், சுசீலா, எல்ஆர்.ஈஸ்வரி பல காவிய பாடல்களைப் பாடி அலங்கரித்தனர். அடி யம்மா ராசாத்தி என்ற பாடல் ஏன் இடம்பெறவில்லை தெரியுமா? படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருந்தால் படத்தின் நோக்கமே சிதைந்து இருக்கும். தன் உள்ளம் அந்த அறையில்தான் இருக்கிறது. என் காதலியும் அந்த அறையில்தான் இருக்கிறாள் என்று நாயகன் காட்டும் வசந்தமாளிகை தான் படத்தின் ஹைலைட்.

adi yemma rasathi song

அப்படி இருக்க அதற்கு முன்னதாக ஒரு எஸ்டேட்டுக்கு இவர்கள் செல்வதும் அங்குள்ள மக்களின் வேண்டுகோளை ஏற்று ஆடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அந்தப் பாடலை பாடலாசிரியர் ஒரு டூயட் பாடலாக அமைத்து விட்டார். காதலனும், காதலியும் கண்ணாடி மாளிகையில்தான் தன் காதலை வெளிப்படுத்துகிறார்கள்.

அப்படி இருக்க முன்னாடியே ஒரு டூயட் பாடல் என்றால் கண்ணாடி அறைக் காட்சியில் எந்த எபெக்ட்டும் இல்லாமல் போய்விடும். அதனால் தான் அந்தப் பாடலை நீக்க வேண்டியதாயிற்று. இவ்வளவு அழகான பாடலை வேறு படத்திலாவது பயன்படுத்தி இருக்கலாமே என்பது தான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

Next Story