கமல் படத்துல சாம்பு மவனா நடிச்சவரு மரணம்..? அட அது சூப்பர் கேரக்டராச்சே..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

by sankaran v |   ( Updated:2025-04-08 05:57:53  )
sambu mavan
X

sambu mavan

கமல் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான டப்பிங் பணிகள் போய்க்கொண்டு இருக்கிறது. படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது நாயகன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் படத்தில் கமல் நடிப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கமலுடன் முதன்முறையாக சிம்புவும் படத்தில் இணைந்து நடிக்கிறார். படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். படம் வரும் ஜூன் 5ல் திரைக்கு வருகிறது. அரசியலிலும் கமல் உத்வேகமாக செயல்பட்டு வருகிறார்.

2004ல் சரண் இயக்கத்தில் கமல், பிரபு இணைந்து பட்டையைக் கிளப்பிய படம் வசூல்ராஜா எம்பிபிஎஸ். சினேகா ஜோடியாக நடித்தார். பிரகாஷ்ராஜ் தான் வில்லன். ஆனால் குணச்சித்திர வில்லன் என்று சொல்லலாம். கமல் ஆன்டி ஹீரோ. ஆனால் அவர்தான் கடைசியில் மனதை டச் செய்யும் ரியல் ஹீரோ ஆகிறார்.

vasool raja mbbsபரத்வாஜ் பாடல்கள் எல்லாமே சூப்பர் ரகங்கள். இந்தப் படத்தில் கமல் பேசும் டயலாக் எல்லாமே ட்ரெண்ட்டிங்காக மாறின. அதுல ஒண்ணுதான் சாம்பு மவன் கேரக்டர். எம்பிபிஎஸ் படிக்க வரும் கமல் ஒரு பேச்சிலர் ரூம்ல தங்குவதற்கு வருவார். அங்கு இருக்கும் ரூம் மெட்டுகளில் ஒருவன் தான் சாம்புமவன்.

பார்க்க அப்பாவியாய் கண்ணாடி போட்டுக் கொண்டு நடித்திருப்பார். அதே போன்ற கேரக்டரை நாம் சாதாரணமாகவே பல இடங்களில் பார்த்திருப்போம். நமது நண்பர்களில்கூட அப்படிப்பட்டவர் இருக்கலாம். அதனால் தான் அந்தக் கேரக்டர் ரீச்சாகியுள்ளது.

'ஏன்டா சாம்பு மவனே ஒண்ணு சொன்னா சரின்னு கேட்கணும்'னு அவனைக் கலாய்ப்பார் கமல். அவனோட ரூமை மாற்றச் சொல்வார். அதற்கு அவன் வாட் இஸ் தி புரொசிஜர் டு சேஞ்ச் ய ரூம்னு இங்கிலீஷ்ல பேசுவான். அந்த டயலாக் படத்துல ரொம்பவே பிரபலமானது. அந்தப் படத்துக்கு அப்புறம் அந்த கேரக்டரில் நடித்தவர் வேறு படங்களில் நடிக்கவில்லை.

redditஇந்த நிலையில் அவரைப் பற்றி ரெட்டிட் சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இணையதளம் ஒன்றில் ரசிகர் ஒருவர் சாம்புமவன் கேரக்டரைப் பற்றியும் அவரது பெயர் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பல் சொன்னவர் அவர் எனது சகோதரரின் கிளாஸ்மெட்தான். பேரு ரத்தின சபாபதி என்றும் அவர் சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார் என்றும் சொன்னாராம். இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story